×
 

பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!

பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிச்சாமி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் எ. வ. வேலு களம் காண்கிறார். 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ. வேலுவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். எ.வ. வேலு அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் என்று கூறினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு 2000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தேர்தல் காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த முயற்சி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார் தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்றார்.

இதையும் படிங்க: CM வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை... தீவிர சோதனை..!! பரபரப்பு..!!

மோடிக்கு ஏற்ப அடிமையாக மாறி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டிற்குள் பாஜகவை அழைத்து வருவதற்கான பணியை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டதாகவும் இந்தியாவிலேயே மோடிக்கு முரட்டு அடிமையாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் விமர்சனம் செய்தார். 

இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share