சட்டமன்றமா.? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா.? சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்த உதயநிதி.!!
சட்டப்பேரவை நிகழ்வுகளை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசி இருந்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. அப்போது பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசி இருந்தார். அப்போது சட்டமன்றத்தில் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வாக ஆளுங்கட்சியினர் பேசுவதை அதிகமாக அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவருக்கு முடிந்த அளவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறினார். இருந்தும் ஆளுங்கட்சியினருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் நீங்கள் அவை குறிப்பில் இருந்த நீக்கியதை வெளியில் ரீல்ஸ் ஆக போட்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளு கட்சியினர் பதில் கூறுவதாக விமர்சனம் செய்துள்ளார். ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தை அல்ல என்றும் ஜோசியக்காரரை அரசு பணியில் நியமித்தது மற்றும் அவரை நீக்கியது தமிழக வெற்றிக்கழக அரசு தான் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துரைமுருகனுக்கு அடுத்து யார்? உதயநிதியை சுற்றி புதிய பதவி பேச்சு.. அறிவாலயத்தில் பரபரப்பு!
முதல்வருக்கு ஓப்பன் சேலஞ்சாக சொல்கிறேன் கோப்புகளை திறந்து பார்க்கட்டும் என்றும் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் எனவும் தெரிவித்தார். பேரவையில் சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஊழல் கோப்புகளை வெளியிடுமாறு சவால் விடுத்துள்ளார். அப்போது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தை முதன் முதலில் நேரலை செய்தது திமுக தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!