கர்நாடகாவிடம் தண்ணீர் கேட்க முடியல..! தமிழ்நாட்டை எப்படி காப்பாத்தப் போறாங்க..? உதயநிதி சவால்!
காவிரி நீர் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது. தண்ணீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை” என்று கூறியிருப்பது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பயிர்க் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றியுள்ள முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்த அதிர்ச்சி தரும் பேச்சுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பது தற்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியபோது, மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளிலும் சரியாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் நினைவூட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் இதுவரை திறக்கவில்லை என்றும், இதுகுறித்து முதலமைச்சர் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.“தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் உடனடியாகக் கேட்டுப் பெற வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு விழுந்த சாட்டையடி... டெல்லி வரை சென்றும் சறுக்கல்... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வைகோ...!
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரைப் பெறுவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் காவிரி டெல்டா விவசாயிகள் தங்களது குறுவை பயிருக்கு தண்ணீர் கிடைக்கும் நம்பிக்கையில் காத்திருக்கும் நிலையில், கர்நாடக அரசின் மறுப்பும், தமிழ்நாடு அரசின் மௌனமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 650 மெடிக்கல் சீட் போச்சே... பீஸ் 4 மடங்கு ஏறுமா? அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை!