உயிர் நண்பர்களை மோத விட்ட உதயநிதி ஸ்டாலின்!! கார்த்திக் - ஆதவ் அர்ஜூனாவுக்கு போட்ட தரமான ஸ்கெட்ச்!!
த.வெ.க.,வில் சேர்ந்து, முன்பை விட அதிகமாக உதயநிதியையும் தி.மு.க.,வையும் விமர்சித்து வருகிறார். இது, உதயநிதியை கோபமடைய வைத்தது. ஆனாலும், கார்த்திக் - ஆதவ் நட்புறவு நீடித்தது.
சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க.,வின் உள் பூசல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் தி.மு.க., சார்பில் போட்டியிடும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரும், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.,) சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
கார்த்திக் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வரவு-செலவுகளை கவனித்து வருபவர். இதனால் உதயநிதியை விட சபரீசனுடன் நெருக்கமாக இருக்கிறார். 2019-ல் தி.மு.க., தேர்தல் பணிகளுக்கு ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ நிறுவனத்தை சபரீசன் அறிமுகப்படுத்தினார். அப்போது இருவரும் நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் தெலுங்கு பேசுபவர்கள் என்பதும் அவர்களின் நட்பை வலுப்படுத்தியது.
ஆனால் பின்னர் ஆதவ் வி.சி.க.,வில் இணைந்து உதயநிதியை கடுமையாக விமர்சித்ததால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு த.வெ.க.,வில் சேர்ந்த ஆதவ், தி.மு.க., மற்றும் உதயநிதியை இன்னும் கடுமையாக தாக்கி வருகிறார். இது உதயநிதியின் கோபத்தை அதிகப்படுத்தியது.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் கடும் நெருக்கடி!! சறுக்குவாரா? தேறுவாரா? திமுகவுக்கு சிக்கல்!
அண்ணா நகரில் தன் மகன் கார்த்திக்கை நிறுத்த மோகன் முதல்வரிடம் அனுமதி பெற்றிருந்தார். கார்த்திக் ஓராண்டாக அந்தத் தொகுதியில் வலம் வந்தார். ஆனால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் போது உதயநிதி தன் ஆதரவாளர் சிற்றரசுக்கு அண்ணா நகரை ஒதுக்க அழுத்தம் கொடுத்தார். ஸ்டாலின் “ஆதவ் மீதான கோபத்தில் கார்த்திக்கை பழிவாங்க வேண்டாம்” என்று கூறியும் உதயநிதி கேட்கவில்லை.
இறுதியில் கார்த்திக் நேரில் சென்று உதயநிதியிடம் பேசினார். அப்போது உதயநிதி “உன்னால் உன் நண்பன் ஆதவை எதிர்க்க முடியாது என ஒப்புக்கொள், அண்ணா நகரைத் தருகிறேன்” என்று கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கார்த்திக் “வில்லிவாக்கத்தில் நின்று வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்” என்று முடிவு செய்தார்.
மறுபுறம், ஓராண்டுக்கு முன்பே வில்லிவாக்கத்தை தேர்வு செய்து தீவிரமாக வேலை செய்து வந்த ஆதவ் அர்ஜுனா, தன் நெருங்கிய நண்பரான கார்த்திக் போட்டியிட வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது இருவரும் ஒரே தொகுதியில் எதிரெதிர் முகாம்களில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க., சார்பில் கார்த்திக், த.வெ.க., சார்பில் ஆதவ் அர்ஜுனா, அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் திருநங்கை ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் நண்பர்களாக இருந்த இருவரின் எதிர்கொள்ளல் தி.மு.க.,வுக்குள் உள்ள உள் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இதையும் படிங்க: தவெகவையும், விஜயையும் விமர்சிக்க மாட்டேன்!! பல்டி அடித்த சுந்தர்.சி!