×
 

வரட்டா மாமே டுர்ர்ர்.. நெட்டிசன்கள் வச்சு கலாய்ச்ச பிரிட்டிஷ் போர் விமானம்.. தாய்நாடு புறப்பட தேதி குறிச்சாச்சு..!

பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், இணையத்தில் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளானது. போர் விமானத்தின் படத்தை வெளியிட்டு தாறுமாறாக விமர்சித்து இருந்தனர். இது பிரிட்டன் அரசுக்கு அவமானமாக கருதப்பட்டது.

பிரிட்டிஷ் ராயல் நேவியின் F-35B லைட்னிங் II ஸ்டெல்த் போர் விமானம் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானம், HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானந்தாங்கி கப்பலில் இருந்து இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையுடன் நடத்தப்பட்ட கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக பறந்து கொண்டிருந்தது.

இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (IACCS) ஆதரவுடன், இந்த பயிற்சி நடைபெற்றது. இந்த F-35B, உலகின் மிக மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றாகும், இதன் மதிப்பு சுமார் $110 மில்லியன் (₹920 கோடி).

விமானம், இந்தியப் பெருங்கடலில் மோசமான வானிலை மற்றும் எரிபொருள் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானி SQUAWK 7700 என்ற அவசர சமிக்ஞையை வெளியிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தின் உதவியை நாடினார்.

இதையும் படிங்க: ஸ்டார்ட் ஆகாத போர் விமானத்தால் பெரும் அவமானத்தில் பிரிட்டன்.. ரகசியங்கள் கசிந்தால் அம்போ தான்!!

இந்திய விமானப்படை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசர நிலையை அறிவித்து, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். தரையிறங்கிய பிறகு, விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டது. இது அதன் குறுகிய தூர இறக்கம் மற்றும் செங்குத்து தரையிறக்க (STOVL) திறனை பாதித்தது.

ஹைட்ராலிக் அமைப்பு தோல்வியால், விமானம் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸுக்கு திரும்ப முடியவில்லை. ஆரம்பத்தில், கப்பலில் இருந்து மூன்று பொறியாளர்கள் மற்றும் ஒரு மாற்று விமானி பழுது பார்க்க முயற்சித்தனர், ஆனால் மழைக்கால வானிலை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மராமத்து வசதிகளின் (MRO) பற்றாக்குறை காரணமாக பழுது சரிசெய்யப்படவில்லை. விமானம், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (CISF) கண்காணிப்பில், விமான நிலையத்தின் பே 4 இல் நிறுத்தப்பட்டுள்ளது.

F-35B, ஸ்டெல்த் திறன்கள், மின்னணு போர் அமைப்புகள், மற்றும் மேம்பட்ட தரவு பகிர்வு ஆகியவற்றைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க விமானமாகும், இதன் விலை சுமார் $110 மில்லியன். இதன் ரகசிய தொழில்நுட்பங்களை பாதுகாக்க, பிரிட்டிஷ் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்திய இணையத்தில் பரவலான மீம்ஸ்களை உருவாக்கியது. கேரளா சுற்றுலாத் துறை, "கேரளா: ஒருமுறை இறங்கினால், புறப்பட விரும்பாத இடம்" என்று AI உருவாக்கிய படத்துடன் கிண்டல் செய்தது. மற்ற மீம்ஸ்களில், விமானம் "F35 B நாயர்" என்ற ஆதார் அட்டை பெற்றது, ஜானி லீவரால் "ஜம்ப்-ஸ்டார்ட்" செய்யப்பட்டது, மற்றும் தேநீர் கடையில் வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவது போன்றவை இடம்பெற்றன. மில்மா பால் பிராண்ட், "குளிர்ந்த இடைவேளைக்கு யார் விரும்ப மாட்டார்கள்?" என்று கேலி செய்தது. 

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி 25 பேர் கொண்ட பிரிட்டிஷ் பொறியாளர் குழு, ராயல் ஏர் ஃபோர்ஸின் A400M விமானத்தில் திருவனந்தபுரம் வந்தனர். விமானம், விமான நிலையத்தின் MRO வசதிக்கு மாற்றப்பட்டு, பழுது பார்க்கப்படுகிறது. தற்போது, கேரளாவில் சிக்கித் தவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானம், அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. “ஹைட்ராலிக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டீஷ் பொறியாளர்கள் குழு தற்போது பணியாற்றி வருகின்றனர்,

அடுத்த சில நாட்களில் பிரிட்டீஷ் போர் விமானம் பறக்கத் தகுதியான நிலைக்குத் திரும்பும். அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும்' என பெயர் வெளியிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கேலி, கிண்டல் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் இறங்கிய ரூ.1000 கோடி போர் விமானம்.. மீட்பதில் ஏற்பட்ட சிக்கல்.. இங்கிலாந்து எடுத்த அதிரடி முடிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share