×
 

இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

பாரத் டாக்ஸி (Bharat Taxi) சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய அரசின் கூட்டுறவுத்துறை முயற்சியால் இன்று (பிப்ரவரி 5, 2026) டெல்லியில் 'பாரத் டாக்ஸி' என்ற புதிய வாடகை வாகன சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, விக்யான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதியம் 3 மணியளவில் இந்த செயலியை தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான ரைட்-ஹெயிலிங் தளமாகும்.

'சாரதி ஹி மாலிக்' (ஓட்டுநரே உரிமையாளர்) என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் இது, ஓலா, உபெர், ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் வாடகை கார், ஆட்டோ, பைக் சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களிலும், இரண்டாம் நிலை நகரங்களிலும் பயணிகள் இத்தகைய சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.

ஆனால், தனியார் நிறுவனங்கள் 20-30% வரை கமிஷன் பிடித்தம் செய்வதால் ஓட்டுநர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கிறது. மேலும், பீக் நேரங்களில் சர்ஜ் கட்டணம் விதிப்பது, நியாயமற்ற போட்டி போன்ற பிரச்சினைகளும் எழுந்துள்ளன. பயணிகளும் அதிக கட்டணத்தால் பாதிக்கப்படுகின்றனர். 

இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் 'பாரத் டாக்ஸி' உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர்களுக்கு (சாரதிகள்) எந்த கமிஷனும் பிடிக்கப்படாது – ஜிரோ கமிஷன் மாடல். அதற்கு பதிலாக, நாளொன்றுக்கு வெறும் ரூ.30 மட்டுமே பராமரிப்பு கட்டணமாக செலுத்தினால் போதும். இதனால் ஓட்டுநர்களின் நேரடி லாபம் கணிசமாக அதிகரிக்கும்.

பயணிகளுக்கு 30% வரை குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்ஜ் கட்டணம் இல்லாதது மற்றொரு முக்கிய அம்சம். இந்த சேவை கடந்த இரு மாதங்களாக டெல்லி மற்றும் குஜராத்தில் சோதனை அடிப்படையில் இயங்கி வந்தது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் (சாரதிகள்) பதிவு செய்தனர். தினசரி 10,000-க்கும் மேற்பட்ட பயணங்கள் நிறைவேற்றப்பட்டன.

சோதனை வெற்றிகரமாக அமைந்ததால், இன்று முதல் டெல்லி-என்சிஆர் பகுதியில் முழுமையாக தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையுடன் இணைந்து சிறப்பு ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். மேலும், பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்க 'சாரதி திடி' திட்டமும் உள்ளது. அமுல் போன்ற வெற்றிகரமான கூட்டுறவு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இதன் நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் 'சஹகார் செ சம்ருத்தி' (கூட்டுறவு மூலம் செழிப்பு) பார்வையை அடிப்படையாகக் கொண்டது. ஓட்டுநர்களை உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு சமூக பாதுகாப்பு, விபத்து காப்பீடு, குடும்ப உடல்நல காப்பீடு போன்றவற்றையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைத்து, நியாயமான, வெளிப்படையான போக்குவரத்து சேவையை உருவாக்க மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளா வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! எப்போ..?? எதுக்கு தெரியுமா..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share