×
 

வளர்ப்பு சரியில்ல..! ஆபாச கமெண்ட்… சிறுவர்களின் அம்மாக்களை ARREST செய்த போலீஸ்…!

எட்டாம் வகுப்பு மாணவியரிடம் ஆபாசமாக கமெண்ட் செய்த சிறுவர்களின் தாய்மார்களை போலீசார் கைது செய்தனர்.

சிறு வயது குழந்தைகள் ஆபாசமான அல்லது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் சம்பவங்கள் குறித்த அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு. இன்றைய உலகில், 15 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் ஆபாச வார்த்தைகள் அல்லது திட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. இது பல பெற்றோரையும் ஆசிரியர்களையும் கவலையடையச் செய்கிறது.

சிறுவர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு முதன்மையான காரணம் அவர்களின் சூழல். வீட்டில், நண்பர்களிடம் அல்லது ஊடகங்களில் குறிப்பாக திரைப்படங்கள், தொலைக்காட்சி, இசை, சமூக வலைதளங்கள் போன்றவற்றில் இத்தகைய வார்த்தைகளைக் கேட்கும்போது அவர்கள் அதைப் பின்பற்றுகின்றனர். நண்பர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளவோ அல்லது கூலாக தோன்றவோ இவை உதவுவதாக அவர்கள் நினைக்கின்றனர். உதாரணமாக, பதின்ம வயதினருக்கு இது ஒரு வகையான சுதந்திர உணர்வையும் முதிர்ச்சியையும் தருவதாகத் தோன்றும்.

கோபம், விரக்தி அல்லது உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கும் இவை ஒரு வழியாக அமைகின்றன. ஆனால் அதே வார்த்தை பிரயோகத்தை மற்ற மாணவர்கள் மீது பயன்படுத்தி சமூகத்தில் சீரழிவு ஏற்படுகிறது. அதிகமாக ஆபாச வார்த்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மாணவி ஒருவரை ஆபாசமாக கமெண்ட் செய்த சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: செக் மோசடி... இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு... கறார் காட்டிய நீதிமன்றம்...!

பெய்ரேலியில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆபாச கமெண்ட் கூறி துன்புறுத்திய 4 சிறுவர்களை நல்ல விதமாக வளர்க்கவில்லை என அவர்களின் தாய்மார்களை போலீசார் கைது செய்தனர். 13 வயதுக்கு கீழான அந்த நால்வரும் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளனர். சிறுமியை ஆபாசமாக பேசிய சிறுவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டப் பிறகு தாய்மார்கள் விடுவிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களில் உள்ள தந்தைகள் ஊர் திரும்பிய பிறகு கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் மிரட்டும் தொனியில் பேசுறாரு... செவிலியர் சங்க பொதுச்செயலாளர் பகிரங்க குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share