×
 
☰

UPI கட்டணம்..! அக்.12ல் வியாபாரிகள் போராட்டம்..! விக்கிரமராஜா அறிவிப்பு..!!

அக்டோபர் 12 ஆம் தேதி வியாபாரிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கான சேவை விதிப்பை எதிர்த்து வருகிற 12 -ந் தேதி போராட்டம் நடைபெறும் என்று. வடக்கே தண்ணீரால் அழிந்து வரும் சூழலில் தமிழகம் தண்ணீர் இல்லாமல் அறிந்து வருகிறது எனவும் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில் கட்டிட வரி விதிப்பு உயர்வதாக அதிர்வலைகள் ஏற்பட்டு வருவதாக விக்கிரமராஜா புகார் கூறினார். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர்கள் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் நகரத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட பிறகு நகரத்திற்கு உள்ளே பேருந்துகள் வராததால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நகரத்திற்குள் பேருந்துகள் வரக் கூடிய சூழ்நிலையை மாவட்ட ஆட்சியர் உருவாக்க வேண்டும்.திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு சாலைகள் முறையாக அமைக்கப்படாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதனை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். திருமணக்கூடங்களில் கடைகள் அமைக்கப்படுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இல்லாதபட்சத்தில் தமிழகம் முழுவதும் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.நாளை சென்னையில் எங்கள் சங்கங்களின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது.இதில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்போம்.மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்து உள்ளது. அடுத்தது கட்டிட வரி விதிப்பு உயர்வதாக அதிர்வலைகள் ஏற்பட்டு வருகிறது. இவை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக அரசுடன் அணுக இருகின்றோம். அதன் பிறகு எங்களது அடுத்த நடவடிக்கையை எடுக்க இருக்கிறோம் என்றார்.

விலைவாசி உயர்வை பற்றி மக்களும், அரசியல் கட்சிகளும், ஆளும் கட்சியும் கவலைப்படவில்லை. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் ஏற்கனவே தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் அதற்கான நகர்வுகள் நடைபெறாமல் உள்ளது என்றும் இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது குறித்து விவாதிக்க இருக்கின்றோம் என்றார்.

தரைக்கடைகள், சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் சேவை வரி அறிவித்து உள்ளார். வருகிற 12-ந் தேதி அதனை எதிர்த்து முதல் கட்டமான யு.பி.ஐ. பண பரிவர்த்தனை தவிர்த்து ரொக்க பணத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. 0.4 சதவீதம் என்பது பின்பு எத்தனை சதவீதமாகவும் உயரும். இதனை வியாபாரிகள் தான் செலுத்த வேண்டும் என்று அரசு கூறினாலும், வியாபாரிகள் எப்படி வசூலித்து கெட்டுவார்கள் என்று அரசுக்குதெரியும். இது விலைவாசி உயர்வுக்கு வழிவகை செய்யும் என்று கூறினார்.

இதையும் படிங்க: 100% கிடையாது..! UPI கட்டணம் மக்கள் மீது சுமத்தப்படாது... நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share