UPSC தலைவராகிறார் அஜய்குமார்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு..!
யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த அஜய் குமாரை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இவர் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர், 1985ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.