பாக்., வாலை ஒட்ட நறுக்க..!! இந்தியாவுக்கு அமெரிக்கா தரும் 2 அஸ்திரம்!! களமிறங்கும் அசூரன்கள்!
இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்ய இருப்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக மோதல் இப்போது முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. இரு நாடுகளும் விரைவில் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன. இந்த நல்லுறவின் அடுத்த பெரிய அடையாளமாக, இந்திய ராணுவத்துக்கு உலகத் தரம் வாய்ந்த இரு முக்கிய ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதை அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதலாவதாக இந்தியாவுக்கு கிடைக்கப்போவது உலகின் மிகச் சிறந்த தோள் ஏவுகணை என்று புகழ்பெற்ற FGM-148 ஜாவலின். இதில் 100 ஏவுகணைகளும் தொடர்புடைய உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 405 கோடி ரூபாய். ரேடியான் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த ஏவுகணை ஒரு வீரர் தோளில் சுமந்து சென்று ஏவக்கூடிய அளவுக்கு எளிதானது.
ஏவிய பிறகு தானாகவே இலக்கைத் துரத்திச் சென்று அழிக்கும் தொழில்நுட்பம் கொண்டது. எனவே ஏவிய வீரர் உடனடியாக மறைந்து கொள்ள முடியும். இரவு, பகல், மழை, பனி, புகை, தூசி எந்தச் சூழலிலும் இது தவறாது இலக்கைத் தாக்கும். உக்ரைன் போரில் ரஷ்ய டாங்குகளை அழித்து உலகம் முழுவதும் பிரபலமான ஆயுதமும் இதுவே.
இதையும் படிங்க: ஈரான் துறைமுக விவகாரம்! இந்தியாவுக்கு சலுகைகளை அள்ளித்தரும் அமெரிக்கா!
இரண்டாவதாக இந்திய ராணுவத்துக்கு வரப்போவது M982 எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகள். இதில் 216 குண்டுகள் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 417 கோடி ரூபாய். ரேடியான் நிறுவனம் தயாரிக்கும் இந்தக் குண்டுகள் ஜி.பி.எஸ். வழிகாட்டுதலுடன் செயல்படுவதால், 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இரண்டு மீட்டர் துல்லியத்தில் தாக்கும்.
சாதாரண பீரங்கி குண்டுகள் 20-25 கி.மீ. தூரம்தான் செல்லும். ஆனால் எக்ஸ்காலிபர் இரு மடங்கு தூரம் சென்று ஒரே அடியில் இலக்கை அழித்துவிடும். இதனால் வெடிமருந்து செலவு மிகக் குறைவு. எதிரி ஜி.பி.எஸ். சிக்னலை ஜாம் செய்தாலும் இந்தக் குண்டு தனது பாதையை விட்டு விலகாது.
இரு ஆயுதங்களும் இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் திறனை பல மடங்கு உயர்த்தும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக லடாக், அருணாச்சலப் பகுதிகளில் சீன ராணுவத்தையும், பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பீரங்கிகளையும் எதிர்கொள்ள இவை பெரிதும் உதவும் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மலைப்பகுதிகளில் ஜாவலின் டாங்க் எதிர்ப்பு ஏவுகணையாகவும், பாலைவன எல்லையில் எக்ஸ்காலிபர் நீண்ட தொலைவு தாக்குதல் குண்டாகவும் செயல்படும்.
வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து இந்த ராணுவ ஆயுத விற்பனை என்பது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்று இரு நாட்டு அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்படி ஏமாத்தலாமா? கட்சிக்கு எதிராக திரும்பும் காங்., மகளிரணி! டெல்லிக்கு தலைவலி!