நீங்கள் குழப்பமடைவீர்கள்! அதிபர் ட்ரம்ப் மீண்டும் விஷமத்தனம்! அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?
அமெரிக்காவும், ஈரானும் இன்று (ஜூன் 14) ஞாயிற்றுக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
மத்திய கிழக்கில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக ஏறக்குறைய உறுதி செய்துள்ள நிலையில், கையெழுத்து நிகழ்வு இன்று நடைபெறுமா என்பதில் முழுமையான தெளிவு இல்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஈரான் தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஒப்பந்தம் தொலைவிலிருந்து (remote) கையெழுத்தாகுமா அல்லது ஐரோப்பாவில் எங்காவது நேரடியாக நடைபெறுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்க ஊடகங்கள் இந்த ஒப்பந்தம் ஜெனீவாவில் கையெழுத்தாகும் என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ராணுவப் பின்னணியில் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இடம்பெற்ற அந்தப் படத்தில் “நீங்கள் குழப்பமடைகிறீர்கள்” (You are confused) என்று எழுதியிருந்தது. இந்தப் பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நான் இல்லையினா இஸ்ரேல்னு ஒருநாடே இருந்திருக்காது! ஒபாமா செஞ்சதை நான் மாத்தினேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு தரப்பும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நிலைக்கு வந்துள்ளன. ஆனால் இறுதி ஒப்பந்தத்தின் தேதி மற்றும் இடம் குறித்து இன்னும் தெளிவு வராதது இரு நாடுகளின் உறவிலும் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தானால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவும் பதற்றம் குறையும் என உலக நாடுகள் நம்புகின்றன. இருப்பினும், இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து நிகழ்வு நடைபெறுமா என்பதில் இன்னும் குழப்பம் தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பிலிருந்து அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அணு ஆயுதம் உருவாக்கவும் கூடாது! வைத்திருக்கவும் கூடாது! ஈரானுக்கு கடைசி வார்னிங் கொடுத்த அதிபர் ட்ரம்ப்!