×
 

ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க விலக்கு அளித்துள்ள அமெரிக்கா, இந்தியா ஒரு சிறந்த கூட்டாளி என்று பாராட்டி உள்ளது.

டெல்லி/வாஷிங்டன்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய 30 நாட்கள் அனுமதி அளித்துள்ள அமெரிக்கா, இந்தியாவை "சிறந்த கூட்டாளி" என்று பாராட்டியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்ட அறிக்கையில், "உலக அளவில் எண்ணெய் விலையை நிலைநிறுத்துவதில் இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்வது இந்த முயற்சியின் ஒரு பகுதி. 

இதையும் படிங்க: பாக்., ஷெரிப் பத்தி தெரியும்!! மோடி பத்தி நல்லாவே தெரியும்!! பணம் என்று வந்துவிட்டால்?! அதிபர் ட்ரம்பின் அடுத்த பாம்!!

இதை அமெரிக்கா முழுமையாக அங்கீகரிக்கிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் சுத்திகரிப்பு நாடுகளில் இந்தியா ஒன்று. சந்தை ஸ்திரத்தன்மைக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தரப்பில், "இந்தியாவில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எந்த தட்டுப்பாடும் ஏற்படாது" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே தள்ளுபடி விலையில் அதிக அளவு எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, போர் நீடித்தாலும் பாதிப்பு இல்லாமல் இருக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் 30 நாட்கள் அனுமதி இதற்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. "அமெரிக்கா தனது நலனுக்காக இந்தியாவை பயன்படுத்துகிறது" என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் மத்திய அரசு, "இந்திய மக்களின் நலனே முதன்மை. எரிபொருள் விலை உயர்வு தடுக்கப்படும்" என்று பதிலளித்துள்ளது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடு. ரஷ்யா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையர் ஆகியுள்ளது. போர் காரணமாக மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டாலும், ரஷ்யா மூலம் இந்தியா தனது தேவையை சமாளித்து வருகிறது. அமெரிக்க தூதரின் பாராட்டு இந்தியாவின் ராஜதந்திர வெற்றியாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மையாகவும் பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் எண்ணெய் விலை எப்படி இருக்கும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய மக்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்ற உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோடிகிட்ட நான் பேசிட்டேன்! அவருக்கும் ஆர்வம்தான்!! காசா அமைதி திட்டத்தில் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share