×
 

கந்து வட்டிக்கு கடன் வாங்கியவர் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து... திமுக முக்கிய பிரமுகர் கைது, மகன் தலைமறைவு...!

ஓசூரில் கந்துவட்டி வழக்கில் திமுகவின் கலை இலக்கிய மாநில துணை செயலாளர், மாமன்ற உறுப்பினரும்,மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவருமான என் எஸ் மாதேஸ்வரன் கைது : அவரது மகன் சேரன் தலைமறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசிகிரி பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு மானசா என்ற தம்பதியினர் ஜிகே இண்டஸ்ட்ரியல் என்ற சிறு தொழிற்சாலை நடத்தி வருகின்றனர், இவர்கள் தொழிற்சாலைக்காக ஓசூரில் உள்ள திமுகவின் மாமன்ற உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரன் என்பவரிடம் ரூ. ஒரு கோடிய 20 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தாகவும், அதற்கு வட்டியாக இதுவரை இரண்டு கோடி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலுத்தியுள்ளதாகவும், மேலும் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று என்.எஸ். மாதேஸ்வரன் மற்றும் அவரது மகன் சேரன் கடந்த 15 ஆம் தேதி அன்று சுரேஷ் பாபு மானசா தம்பதியினர் இல்லத்துக்கு சென்று தற்போது பணம் கொடுத்தாக வேண்டும் என தொந்தரவு செய்தும்,பணம் கொடுத்தால் தான் வீட்டை விட்டு செல்வோம் என்று தம்பதியினரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது

மேலும் சுரேஷ் பாபுவின் மனைவி மானசாவை வீட்டில் அமர வைத்துவிட்டு சுரேஷ் பாபு மிரட்டி வீட்டின் அருகே இருந்த இந்தியன் வங்கிக்கு சென்று வங்கியின் மூலம் 21 லட்சம் பெற்றுள்ளார் மேலும் அங்கிருந்து தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பணம் மேலும் கேட்டு பணம் கொடுத்தால் தான் இங்கிருந்து செல்ல அனுமதிப்பேன் என்று மிரட்டியதாகவும் அதன் பிறகு சுரேஷ்பாபுவின் நண்பர் பெருமாள் மூலம் ரூபாய் 15 லட்சம் ரூபாயை மாதேஸ்வரன் செல்போனுக்கு ஜிபி மூலம் பணம் அனுப்பியுள்ளனர் மேலும் அவரிடம் இருந்து இரண்டு காசோலைகளை மிரட்டி வாங்கி உள்ளார் அதன் பிறகு அங்கிருந்து என் எஸ் மாதேஸ்வரன் அவரது மகனும் சென்றதாகவும் தெரிகிறது

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட சுரேஷ் பாபு மானசாவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஓசூர் சிப்காட் போலீசார் கந்து வட்டி கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  திமுக மாமன்ற உறுப்பினர் என் எஸ் மாதேஸ்வரனை கைது செய்துள்ளனர், மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகன் சேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: என்னது.. முதுகில் குத்தினோமா..!! தொடர்ந்து விமர்சித்தால் இதுதான் நடக்கும்..!! திமுகவை எச்சரித்த அமைச்சர்..!!

இதையும் படிங்க: செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட 5 நாளில் அடுத்த குறி! அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share