×
 

காலிப் பணியிடம் இருந்தா தான் “ஒப்பந்த வேலைக்கு உடனடி நிரந்தரம் கிடையாது!” – அமைச்சர் மா.சு..!

பணி நிரந்தரம் கோரிப் போராடும் நிலையில், காலிப் பணியிடங்கள் உருவானால் மட்டுமே சாத்தியம் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்தச் செவிலியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். செவிலியர்களின் பணி நியமன ஆணையில் உள்ள நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டிய அவர், காலிப் பணியிடங்கள் உருவாவதைப் பொறுத்தே பணி வரன்முறை அமையும் என்பதைத் தெளிவாகக் கூறினார்.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள், தங்களை உடனடியாகக் ‘டைம் ஸ்கேல்’ (Time Scale) எனப்படும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், செவிலியர்களின் பணி நியமன ஆணையில் உள்ள நிபந்தனைகளை அவர்கள் ஒருமுறை ‘ரீ-கால்’ (Recall) செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். "இரண்டு ஆண்டுகள் பணி முடித்தவுடன் பணி நிரந்தரம் கோருவது சட்டப்பூர்வமான உரிமையாக அமையாது. துறையில் காலிப் பணியிடங்கள் உருவாகும்போதும், பணி மூப்பு அடிப்படையிலுமே  அவர்கள் ‘ரெகுலரைஸ்’ (Regularize) செய்யப்படுவார்கள்" என்று துறைசார்ந்த விளக்கங்களை முன்வைத்து அரசு நடைமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

அரசுக்குப் பணி வழங்க விருப்பமில்லை என்று கூறுவது அபாண்டமானது எனக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை சான்றுகளுடன் விளக்கினார். 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் சுமார் 1,200 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. கடந்த 2021 முதல் 2025 வரை ஆண்டுவாரியாகப் பல ஆயிரம் பேர் பணி மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, 2024-ல் மட்டும் 1,694 காலிப் பணியிடங்கள் சீரமைக்கப்பட்டுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள 169 காலிப் பணியிடங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: அநியாயம் நடக்குது தளபதி… கட்சியை விட்டே நீக்கிட்டாங்க… போராட்டத்தில் குதித்த தவெக தொண்டர்கள்…!

இதுவரை மொத்தம் 3,783 பேருக்குப் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 8,322 பேரின் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனப் போராடுவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றார். "போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், பணி நியமனத்தின் போது வழங்கப்பட்ட நிபந்தனைகளைச் செவிலியர்கள் ஒருமுறை கூர்ந்து கவனிப்பது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு: "தூங்குவதுபோல் நடிக்கிறது திமுக!" - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share