நீங்க சொன்னா செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க... இனிமே இப்படி செய்யாதீங்க..! வைகோவிற்கு அன்பு கட்டளையிட்ட முதல்வர்...!
வைகோ உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு கட்டளையிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான வைகோ தலைமையில் "சமத்துவ நடைப்பயணம்" என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான நடைப்பயணம் இன்று திருச்சிராப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நடைப்பயணத்தை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது திமுக கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.சமத்துவ நடைப்பயணம் திருச்சியில் உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு வந்து, சமத்துவத்தை குறிக்கும் சிவப்பு - மஞ்சள் நிற கொடியை வைகோவிடம் வழங்கி, பயணத்தை துவக்கி வைத்தார். இந்த கொடியில் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய பள்ளிவாசல் போன்ற அனைத்து மதங்களையும் குறிக்கும் சின்னங்கள் இடம்பெற்றிருந்தன.
ஸ்டாலின் உரையாற்றிய போது, சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்தினார். வைகோவும் தனது உரையில், இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் மது அடிமையிலிருந்து மீட்பது, சாதி மோதல்களை தடுப்பது, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.இந்த நடைப்பயணம் சுமார் 190 கிலோமீட்டர் தொலைவை கடந்து, பல கிராமங்கள் மற்றும் நகரங்களை தாண்டி ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. வைகோவுடன் நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், இளைஞர்கள் பங்கேற்கின்றனர். பயணத்தின் போது இரவு நேரங்களில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மருத்துவ குழு, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சனாதன சக்தி துணையோடு திரிபுவாத அரசியல்... விஜயை மறைமுகமாக சாடிய திருமா...!
இந்த நிகழ்வின்போது வைகோவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அன்பு கட்டளை ஒன்றை இட்டுள்ளார். வைகோவின் சமத்துவ நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால் உடல் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற நடைபயணங்களை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்றும் கவனமாக நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நீங்கள் கட்டளையிட்டால் செய்வதற்கு ஆயிரம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றும் உடல் நலனை கருத்தில் கொள்ளுங்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு! அறிவாலயத்தில் நடந்த மீட்டிங்! 2026 தேர்தல் அப்டேட்!