வைஷாலியின் வெற்றி சிறந்த சாதனை... புகழ் மகுடம் சூட்டிய பிரதமர் மோடி!
கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
வைஷாலியின் சதுரங்க வாழ்க்கை, அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கியது. ஆறு வயதில், அவரது பெற்றோர் – தந்தை ரமேஷ்பாபு, டி.என்.எஸ்.சி. வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றுபவர் மற்றும் தாய் நாகலட்சுமி. அவரை கார்டூன் நிகழ்ச்சிகளிலிருந்து விலக்க முயன்றபோது சதுரங்க வகுப்புகளில் சேர்த்தனர். ஆனால், ஒரு வருடத்திற்குள் அது விளையாட்டாக மாறியது. ஏழு வயதில் போட்டிகளில் பங்கேற்ற அவர், விரைவாகத் தனது திறனை வெளிப்படுத்தினார். 2012ஆம் ஆண்டு அண்டர்-12 பெண்கள் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் மற்றும் 2015இல் அண்டர்-14 பிரிவில் உலக சாம்பியனாக உயர்ந்தார்.
இந்த வெற்றிகள் அவரது திறமையின் ஆரம்ப அடையாளங்கள் மட்டுமல்ல, இந்திய சதுரங்கத்தின் எதிர்காலத்தை ஏற்கனவே காட்டின. இதனிடையே, இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலி, சாமர்கண்டில் நடந்த ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். தனது பட்டத்தைப் பாதுகாத்து, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் வைஷாலி.
நேற்று நடைபெற்ற 11 வது மற்றும் இறுதிச் சுற்றில், வைஷாலி சீனாவின் டான் சோங்யியுடன் நடந்த போட்டியை டிரா செய்திருந்தார். இதன் மூலம், அவர் எட்டு புள்ளிகளைப் பெற்றுப் போட்டியை நிறைவு செய்தார். ரஷ்யாவின் கேட்டரினா லாக்னோவும் எட்டு புள்ளிகளைப் பெற்று இருந்தாலும் சிறந்த டைபிரேக் ஸ்கோரின் அடிப்படையில் வைஷாலி சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வரும் 22ம் தேதி திரிபுரா செல்கிறார் பிரதமர் மோடி.. காரணம் இதுதான்..!!
மகளிர் செஸ் போட்டியில் கிராஸ்லாம் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வைஷாலியின் வெற்றி சிறந்த சாதனை என்றும் வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை என்றும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. விமர்சித்த திமுக எம்.பி கனிமொழி..! பரபர பதிவு..!!