×
 

போலி பெண் விடுதலை... முகத்திரை கிழிஞ்சது..! வெளுத்து வாங்கிய வளர்மதி..!

பெண் விடுதலை பேசும் போலி திராவிட மாடலின் முகத்திரை கிழிந்ததாக வளர்மதி தெரிவித்துள்ளார்.

பெண் விடுதலை பேசும் 'திராவிட மாடல்' அரசின் போலி முகத்திரை கிழிந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். எழுத்தாளர் மீனா கந்தசாமி வெறும் கவிஞர் மட்டுமல்ல என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தலித் விடுதலைக்காகத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஒலிப்பவர். தலித் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விளிம்புநிலை மக்களின் அரசியலை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவர் என கூறியுள்ளார்.

அத்தகைய ஆளுமை மிக்க ஒரு பெண், "திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை" என்று தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதற்காக, திமுக-வின் ஐடி விங் அவரை இணையதளத்தில் மிகக் கேவலமான முறையில் வசைபாடியுள்ளது என்று தெரிவித்துள்ள. ஆபாசமான வசவுகளும், திட்டமிட்ட சைபர் தாக்குதல்களும் தொடர்ந்து வந்துள்ளன என்றும் கூறினார். 

வாய்தவறிச் சொன்ன வார்த்தைக்காக வருத்தம் தெரிவித்தபிறகும் சி.வி. சண்முகத்தோடு வரிந்து கட்டிக்கொண்டு வார்த்தைப்போர் நடத்திய பெண்ணியவாதிகள் வாய்மூடிக்கிடப்பதன் காரணம் என்ன ஒரு கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: நிர்வாகத்தின் நஞ்சு... விழிக்குமா அரசு? விளாசிய வளர்மதி..!!

'பெண் உரிமை காக்கும் அரசு' என்று தம்பட்டம் அடிக்கும் அமைச்சர்களே., உங்கள் கண்ணெதிரே ஒரு பெண் எழுத்தாளர் சமூக வலைதளக் கூலிகளால் சிதைக்கப்படுவதை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சீரழிக்கும் உங்கள் ஐடி விங் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணிவில்லாத நீங்கள், எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்களிடம் வாக்குக் கேட்கப் போகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.  முற்போக்குவாதிக்கே இந்த நிலை என்றால், சாமானியப் பெண்களின் கதி என்ன என்றும் விளம்பரப் பூக்களால் நீங்கள் வேயும் கோட்டை ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளியில் சரிந்து கொண்டிருக்கிறது என்றும் வளர்மதி தெரிவித்தார். 

இதையும் படிங்க: வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share