×
 

அந்த கயிறு கண்ணை உறுத்துதோ.? இந்துக்கள் மீதான வெறுப்பு... தவெகவை விளாசிய வானதி சீனிவாசன்..!!

அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது என்று பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் ராஜ்மோகன், “கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது” என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் "B team" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என்று கூறினார்.

பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

“மதச்சார்பின்மை” என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும் என முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share