ஒரு வருஷம் கொண்டாட்டம்தான்!! மத்திய அரசின் பக்கா ப்ளான்! வந்தாச்சு சூப்பர் உத்தரவு!
'வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று நவம்பர் 7 – இந்தியாவின் தேசபக்தி இதயத்தில் என்றும் ஒலிக்கும் 'வந்தே மாதரம்' பாடலின் 150வது பிறந்தநாள்! வங்க மகாகவி பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875 அட்சய நவமி தினத்தில் 'ஆனந்த மடம்' நாவலுக்காக எழுதிய இக்கீதம், சுதந்திர போரில் இந்தியர்களின் போர்முழக்கமாக மாறியது. இப்போது மத்திய கலாசார அமைச்சகம் இதை ஓராண்டு மகா திருவிழாவாக அறிவித்துள்ளது. இசை, கலை, நாடகம், கண்காட்சி என நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்குகிறது!
நான்கு கட்டங்களாக இந்த கொண்டாட்டம் நடக்கும். முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 14 வரை – நாடெங்கும் 'வந்தே மாதரம்' ஒரே நேரத்தில் ஒலிக்கும்! பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைவரும் பாடி வீடியோ எடுத்து, சிறப்பு இணையதளத்தில் பதிவேற்றலாம். இரண்டாவது கட்டம் 2026 ஜனவரி 19-26 குடியரசு தின வாரம். மூன்றாவது கட்டம் ஆகஸ்ட் 7-15 சுதந்திர தின வாரம். இறுதி கட்டம் 2026 நவம்பர் 1-7 உச்சக்கட்ட இசை வெடிக்கும்!
சிறப்பம்சம்: மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எஃப்) மற்றும் மாநில போலீஸ் இசைக்குழுக்கள் ஆண்டு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 'வந்தே மாதரம்' கச்சேரி நடத்தும். பள்ளிகளில் கண்காட்சி, போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என இளைய தலைமுறைக்கு தேசபக்தி ஊட்டப்படும். மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இப்பாடல் ஒற்றுமை, சுயமரியாதை, சமூக மாற்றத்தின் குரல். 150 ஆண்டுகளாக இந்தியாவை எழுப்புகிறது" என்று பெருமிதமாக குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா!! கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார் மோடி!! சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியீடு!
இந்தியாவின் ஆன்மா இப்பாடலில் ஒலிக்கிறது. சுதந்திர வீரர்கள் சிறையில் பாடியது, ரயில்களில் முழங்கியது, இன்று ஸ்டேடியங்களில் எதிரொலிக்கிறது. இந்த ஓராண்டு கொண்டாட்டம், ஒவ்வொரு இந்தியனையும் மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும். இன்று மாலை உங்கள் பள்ளி/அலுவலகத்தில் 'வந்தே மாதரம்' பாட தயாரா? வாருங்கள், நாடே ஒன்றாகப் பாடுவோம்!
இதையும் படிங்க: பேங்க் ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி..!! நிர்மலா வைத்த செக்!! பொதுமக்கள் ஹாப்பி அண்ணாச்சி..!!