திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!
திருமாவளவனின் முடிவே இறுதியானது என வன்னியரசு தெரிவித்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்தப் பற்றாக்குறை தவெகவை கூட்டணி அரசியலின் பக்கம் தள்ளியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கக் கோரினார். ஆனால், ஆளுநர் பக்கம் இருந்து தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி இணைந்த நிலையில் 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கு கிடைத்தது. இருப்பினும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! விசிக அலுவலகத்திற்கு செல்லும் விஜய்..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
அதற்காக கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தமிழக வெற்றிக்கழகம் நாடியது. இன்று திருமாவளவன் முடிவை அறிவிக்கிறார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் முடிவுக்காகவே காத்திருக்கிறோம் என எம்எல்ஏ வன்னியரசு தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக இருப்பதாக கூறினார். விசிக நிலைப்பாடு என்ன என்பதை திருமாவளவன் நிச்சயம் அறிவிப்பார் என்றார்.
இதையும் படிங்க: ஓரங்கட்ட, ஒதுக்க நினைத்தால் நாங்களே மைய்யம் என்பதை நிரூபிப்போம்..! வன்னியரசு சூசகம்..!