×
 

மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா? - விஜய்க்கு எதிராக ஆவேச போஸ்டர்கள்..!

இதற்கு எதிராக சோசியல் மீடியாவில் வேல்முருகனை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின்  தலைவர் நடிகர் விஜய் , பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்  வழங்கினார். கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது ஒரு சில மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் கட்டிப்பிடித்தும் தங்களின் அன்பை  வெளிப்படுத்தினர். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு  சேலத்தில் நடந்த கூட்டத்தில் நடிகரை நடிகராக பாருங்கள் நடிகருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறானது என விமர்சித்து பேசினார்.   வேல்முருகன் பேசிய இந்த பேச்சு,  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வேல்முருகனை கண்டித்து , தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு எதிராக சோசியல் மீடியாவில் வேல்முருகனை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.  இதனிடையே, விழுப்புரம் நகரம் முழுவதும் நடிகர் விஜய் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறியதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு எதிரான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் இடையே போஸ்டர் யுத்தம் தீவிரமடைந்துள்ளது. நகரில் பதற்ற நிலை நிலவுவதால் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

அந்த போஸ்டரில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக பெண்களின் மீதும், மாணவிகளின் மீதும் கை வைத்து தொட்டு பேசுவது தமிழர்களின் பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்புடையது அல்ல. ஆகவே அதுபோல் நடந்து கொண்டு சினிமா மாயயை வைத்து ஆட்சி கட்டிலில் உட்கார்ந்துவிடலாம் என்ற கனவு கண்டிருக்கும் தமிழக வெற்றி கழக தலைவரை கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share