“கூட்டணியே போனாலும் பரவாயில்லை...” - தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுகவை அடித்து துவைத்த வேல்முருகன்...!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார்.
13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற முன்னணி கட்சிகள் கூட வாய் திறக்காத நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார்.
தூய்மை பணியார்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், இந்த போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் முன்னெடுப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே அவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது வாழ்வுரிமையை பாதுக்காக்க வேண்டும் என முதல் அறிக்கையை நான் தான் வெளியிட்டேன். எனது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு போராட்டக் களத்தில் தூய்மை பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அன்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு விரிவாக அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன்.
மனித கழிவுகளை அகற்றி, இங்கு மனிதம் ஆரோக்கியத்தோடு வாழ்வதற்கும், சுற்று சூழலை ஆரோக்கியத்தோடு பாதுகாப்பதற்குமான அடிப்படை பணியை செய்கின்ற அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுக தீர்வை ஏட்ட வேண்டும். அவர்களுக்கான பணி நிரந்தரத்தை உறுதி செய்யணும். குறிப்பாக ஆசிரியர்கள் போராட்டத்திலும் காவல்துறையைக் கொண்டு ஆசிரியர்களை கையாளும் முறை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை கையாளும் முறை ஏற்புடையதாக இல்லை.
இதையும் படிங்க: திமுக ஒடுக்குமுறை மானக்கேடு முதல்வரே! இது பாசிச வெறியாட்டம்.. சீமான் கொந்தளிப்பு..!
சென்னை உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக தூய்மை பணியாளர்களை அவ்வளவு வேக, வேகமாக காவல்துறை கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கூட்டணியில் இருப்பதால் திமுகவை நோக்கி வேல்முருகன் கேள்வி எழுப்பவில்லை என யாராவது சொல்ல முடியுமா?. கவின் வீட்டுக்கு போனதாக இருக்கட்டும், அஜித் வீட்டுக்கு போய் முதல் முதல்ல ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தொடங்கியதாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் எங்கள் காவல்நிலை துப்பாக்கி சூடுகள் நடந்தாலும் முதல் ஆளாக போய் நிக்கிறது வேல்முருகனா இல்லையா?.
அதே மாதிரி தூத்துக்குடி ஸ்டெட்லைட் பிரச்சனை சட்டமன்றத்தில் முதல்ல பேசி நீதி கோரியதில் இருந்து எல்லா பிரச்சனைக்கும் முதல் ஆளாக எழுந்து குரல் கொடுத்து சட்டமன்றத்தில நான் எதிர்வினை ஆற்றியுள்ளேன். சட்டப்பேரவையில் எனக்கும் அமைச்சர்களுக்கும் ஒருமையில் சண்டை கூட நடந்திருக்கு. அது கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அதை பத்தி நான் கவலைப்படவே இல்லை. அத கவலைப்படுற ஆளும் வேல்முருகன் இல்லை எனக்கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் அடுத்த விக்கெட்... தங்கமணியும் விலகுகிறாரா? பரபர கருத்து