கல் எறியதான் செய்வாங்க..! ஆனால் பொறுமை அவசியம்... துணை ஜனாதிபதி கொடுத்த அட்வைஸ்...!
வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக துணைத் தலைவர் CP ராதாகிருஷ்ணன் பேசினார்.
வாக்கு திருட்டு பிரச்சனை இந்தியாவில் வீரியம் எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டை வருகிறார். பல்வேறு ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்ட நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. வேண்டுமென்றே ராகுல் காந்தி புகார் கூறுவதாகவும் வாக்கு திருட்டு நடக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், வாக்குத்திருட்டு எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. போலி இணைய முகவரியை உருவாக்கி அதன் மூலம் வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 5 படிநிலைகளில் வாக்குகள் நீக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் நீக்கத்திற்காக தனியாக மென்பொருளை உருவாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை இணையதளம் மூலம் திருடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தி உள்ளது. உங்களுக்கே தெரியாமல் உங்களது எண்ணை மாற்ற முடியும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டது.
வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக துணைத் தலைவர் CP ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். நான் கட்சி அரசியலில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். எனது நல்ல நண்பர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், பொதுவில் இருப்பவர்கள் எப்போதும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஒரே ஆள்… 233 ஓட்டுகள்… ஆதாரத்துடன் வாக்குத்திருட்டை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி…!
அது மிகவும் முக்கியமானது. மக்கள் எப்போதும் கற்களை எறிவார்கள், எந்த மரம் நிறைய பழங்களைத் தருகிறது என பார்ப்பார்கள் தெரிவித்தார் . எனவே, பொது வாழ்வில் நமக்கு அந்த பொறுமை இருக்க வேண்டும் என்று கூறினார். நாம் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார். அவர்களுக்கு கேள்விகள் கேட்க உரிமை உண்டு. பதில்களைக் கொடுக்கவோ அல்லது பதிலளிக்காமல் இருக்கவோ நமக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூரில் ஒரே வீட்டில் 79 ஓட்டுகளா? சர்ச்சை... TN FACT CHECK கொடுத்த விளக்கம்...!