×
 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய புள்ளிகளுக்கு செக்... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ...!

துணை இயக்குனர்கள், முன்னாள் இயக்குனர்கள், பதிவாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்  முறைக்கேட்டில் ஈடுபட்டிருப்பதும் இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு என லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

2023-24 காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளுக்கு  அனுமதி வழங்கியதில்முறைக்கேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழகத்தில் உள்ள 47 சதவீத க பொறியியல் கல்லூரிகள் முறைக்கேட்டில்ஈடுபட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விதிமுறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கியதாக அண்ணா பல்கலைக் கழகத்தின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், முன்னாள் இயக்குனர்கள், பதிவாளர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்  முறைக்கேட்டில் ஈடுபட்டிருப்பதும் இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!

கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, பேராசிரியர்களின் எண்ணிக்கை முறையாக ஆய்வு செய்த பிறகு அங்கீகாரம் என்பது வழங்கப்படும். இதற்காக ஆய்வுக் குழு அமைத்து, அவர்கள் கல்லூரிகளை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையாக கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்.ஆனால் வழிமுறையிலும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை அங்கீகாரம் வழங்கும் மையத்தின் முன்னாள் இயக்குனர் தற்போது நாகலாந்து நேஷனல் இன்ஸ்டிடியூட் டில் இயக்குனராக பணிபுரிந்து வரக்கூடிய இதய பெருமாள் சித்ரா ஆவார். 

முன்னாள் பதிவாளர் ரவிக்குமார், தற்போதைய பொறுப்பு பதிவாளர் பிரகாஷ், தற்போதைய அப்ளிகேஷன் இயக்குனர் கிரிதரன் கோயம்புத்தூர் துணை இயக்குனர் மாலதி, மதுரை துணை இயக்குனராக இருக்கிற பிரகதீஸ்வரன், திருச்சி துணை இயக்குனராக உள்ள சற்குணம், திருநெல்வேலி துணை இயக்குனராக இருக்கிற மாரிச்சாமி கண்ணன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் முறைகேட்டில் ஈடுபட்டதாக திருவள்ளூர் பிரதீப்ஷா பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாதா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் கதிர் பொறியியல் கல்லூரி, திருவள்ளுர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் நிர்வாகம் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.

தொடர்ந்து இவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த இருப்பதாகவும் இந்த பொறியியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share