சம்பவம் நடந்ததும் விஜய் எதுக்கு ஓடி ஒளியணும் ? ஆ.ராசா சாடல்...!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஏன் ஓடி ஒளியவேண்டும் என ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தமிழகத்தை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.
விஜயின் வாகனம் 6 மணி நேரம் தாமதமாக வந்ததும், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் மயங்கி சுருண்டு விழுந்தனர். இதில் 18 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பெருந்துயரத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துயரத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை மாற்றி மாற்றி வைக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தரப்பினர். தவெகவின் மோசமான ஏற்பாட்டினால்தான் நெரிசல் ஏற்பட்டது என விமர்சிக்கின்றனர். மறுபக்கம், திமுகவின் சதியால் சம்பவம் நடந்தது என தவெக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அரசியல் தற்குறி! கொலை குற்றவாளி...! விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… சர்ச்சை!
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சமூக வலைதளத்தில் கருத்து சொன்னாலே கைது. இப்படி காவல்துறை ஆளும் வர்க்கத்தின் அடிவாருக்களாக மாறினால், இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி. கரூர் நெரிசல்ல நடந்தது 4 என்ன? தமிழகம் வந்தது பாஜ உண்மை கண்டறியும் குழு ஹேமாமாலினி விசிட், இலங்கை, நேபாளத்தில் ஜென்-Z தலைமுறை எழுச்சியைப் போல, தமிழகத்திலும் இளைஞர்கள் கூடி புரட்சி செய்ய வேண்டும். அது ஆட்சி மாற்றத்தின் அடித்தளமாகவும், அரசு பயங்கரவாதத்தின் முடிவாகவும் இருக்கும். பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தினும் சாஸ்திரங்கள் எனக் கூறியிருந்தார்.
நேபாளத்தில் சமீபத்தில் ஜென்-Z புரட்சியால் அரசு கவிழ்ந்ததை உதாரணமாகக் காட்டி, தமிழகத்தில் போன்ற எழுச்சி தேவை என வலியுறுத்தினார். இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாக விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், ஆதவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்த ஆதவ் அர்ஜூனா, அவசரமாக அந்தப் பதிவை நீக்கினார். இருப்பினும், ஸ்க்ரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதத்தை தீவிரப்படுத்தின. இரவோடு இரவாக சமூக வலைதள பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கியுள்ளார் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறினார். இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா என்றும் ஆ.ராசா தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ஏன் விஜய் கண்டிக்கவில்லை என்றும் கேட்டார்.
விஜய் செல்ல முடியாவிட்டாலும் கட்சி நிர்வாகிகளாவது கரூர் மக்களுடன் இருந்து மக்களை சந்தித்து இருக்க வேண்டும் என்றும் சம்பவத்திற்குப் பிறகு விஜய் ஓடி, ஒளிந்துகொண்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் சம்பவம் "திட்டமிட்ட சதி"... குண்டைத் தூக்கிப் போட்ட தவெக...!