முடிச்சு விட்டாய்ங்க... விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தட்டித் தூக்கிய போலீஸ்...!
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜயின் இல்லத்திற்கு அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் மற்றும் பொது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட ஸ்டாம்பெட் பேரழிவுக்கு பிறகு விஜய் மீது ஏற்பட்ட விமர்சனங்களின் நடுவே இந்த மிரட்டல் வந்திருப்பதால், அது அரசியல் சதியாகவும், திட்டமிட்ட தாக்குதலாகவும் கருதப்படுகிறது.
அதிகாலை சுமார் 2 மணிக்கு, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை விடுத்து, உடனடியாக தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மோப்ப நாய்களை வரவழைத்து விஜய் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் போனா விஜய் உயிருக்கே ஆபத்து... குண்டை தூக்கிப் போட்ட நயினார்...!
செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்ததில் முகமது சபிக் என்பவர் விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவ்வப்போது முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது புரளியாக இருந்தாலும் கூட அதீத கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லி... விஜயை மீண்டும் சீண்டும் உதயநிதி ஸ்டாலின்...!