×
 

#BREAKING மாமல்லபுரத்தில் விஜய்... கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருடன் இன்று சந்திப்பு...! 

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக விஜய் மாமல்லபுரம் சென்றடைந்துள்ளார். 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், கரூர் வந்து அனைவரையும் நேரில் சந்திப்பதாக உறுதியளித்தார். 

இதனையடுத்து கரூர் செல்ல பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க திருமண மண்டபம் கிடைக்கவில்லை என்றும் தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 

அதனையடுத்து நேற்று காலை தவெக நிர்வாகிகள் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை 5 பேருந்துகள் மூலமாக சென்னை அழைத்து வந்தனர். 

இதையும் படிங்க: 41 பேர் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நாளை சந்திக்கிறார் விஜய்..!! கரூரிலிருந்து கிளம்பிய மக்கள்..!!

நேற்று கரூரில் இருந்து புறப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்றிரவு  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு விஜய் நேரில் வந்து உயிரிழந்த 37 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இந்த நிலையில் மாமல்லபுரம் நட்சத்திர உணவக வளாகத்தில் ஏராளமான பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக பனையூரில் இருந்து புறப்பட்ட விஜய் தற்போது மாமல்லபுரம் வந்தடைந்துள்ளார். மேலும் பல்வேறு பகுதியில் இருந்து தமிழக வெற்றிக கழக நிர்வாகிகள் மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா? சும்மா பேசிட்டு இருக்காதீங்க..! சீமான் காட்டம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share