×
 

டெல்லிக்கு போங்க சார்… ஸ்டாலின் சர்க்காரை தூக்கி எறிவோமா? திருச்சியில் விஜய் மாஸ் பிரச்சாரம்..!!

திருச்சியில் வேட்பு மனுதாக்கல் செய்த விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை முழுமையாக்கும் விதத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தார். பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது மத்திய மாநில அரசுகள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் சிலிண்டர் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்திருக்கும் என்று விஜய் தெரிவித்தார். ஸ்டாலின் சாரை கேட்டால் நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவார் என்றும் இதற்காக அவர் டெல்லி சென்றிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பினார். சமையல் எரிவாயு பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கேஸ் மானியம், வேலைவாய்ப்பு, நீட் ரத்து இவை அனைத்தும் என்ன ஆச்சு..? என்ன ஆச்சு..? என்ற முதல்வரை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார். ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை கொடுப்போம் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்றும் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் கொடுப்பேன் எனவும் விஜய் வாக்குறுதி கொடுத்தார். அடிப்படை வசதிகள் இல்லாததால் தான் பிளஸ் டூ மாணவி கொலை சம்பவம் நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டி பேசினார்.

இதையும் படிங்க: #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

இப்போதும் அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் முதல்வர் ரெடி ஆகிவிட்டார் என விஜய் விமர்சனம் செய்துள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்று தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு அமைச்சர் செய்ததாக குறிப்பிட்டார். உங்களின் வேலை வாய்ப்பை பறித்த ஸ்டாலின் சர்க்காரை தூக்கி எறிவோமா என கேள்வி எழுப்பினார். இந்த ஊழலை எல்லாம் கணக்கு போட்டால் தலை சுற்றும் எனவும் விஜய் தெரிவித்தார். 

இதையும் படிங்க: என்னப்பா ஆச்சு..? திருச்சியில் போலீஸ் வாகனம் மோதி கீழே விழுந்த நபர்... பதறி ஓடிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share