×
 

கையெழுத்து போடச் சொல்லி போலீஸ் மிரட்டுனாங்க!! சிபிஐயிடம் விஜய் கொடுத்த ஆதாரம்!! தவெகவினர் தகவல்!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டி, போலீசார் கையெழுத்து பெற்று இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் அதற்கான ஆதாரங்களை, த.வெ.க., தலைவர் விஜய் சமர்ப்பித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை போலீசார் மிரட்டி கையெழுத்து வாங்கியதாக தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் மற்றும் தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரிடம் தனித்தனியாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: இறுக்கமான முகத்துடன் சென்னை திரும்பிய விஜய்!! முடிந்தது முதற்கட்ட விசாரணை!! வெளியான முக்கிய தகவல்!

விசாரணையின்போது விஜய் தரப்பில் முக்கிய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கு நான்கு மணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால், போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டி, "சம்மதத்துடன் தான் பிரேத பரிசோதனை நடந்தது" எனக் கூறும் வகையில் முன்தேதியிட்டு கையெழுத்து பெற்றதாக த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அவசர பிரேத பரிசோதனையை நியாயப்படுத்துவதற்காகவே இத்தகைய ஆவணங்கள் திரட்டப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்களை விஜய் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

த.வெ.க. இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் கூறியதாவது: "கரூர் துயரத்தில் காவல்துறையின் பல தவறுகளை சி.பி.ஐ.க்கு சுட்டிக்காட்டியுள்ளோம். கூட்டத்துக்கு 607 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.

ஆனால், அப்போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் 500 போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறுகிறார். இந்த முரண்பாடுகள் காவல்துறையின் குளறுபடிகளை வெளிப்படுத்துகின்றன."

விசாரணை முடிந்து விஜய் சென்னை திரும்பினார். பொங்கல் பண்டிகை மற்றும் 'ஜனநாயகன்' படம் தொடர்பான பணிகள் காரணமாக மற்றொரு நாளில் விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் கேட்டுள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரும் ஜனவரி 19-ஆம் தேதி விஜய் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்! விஜய் டிரைவரிடம் 8 மணி நேரம் விசாரணை! சிபிஐ முன்வைத்த கிடுக்குப்பிடி கேள்விகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share