தமிழ்தாய் வாழ்த்தை முந்திய வந்தே மாதரம் பாடல்!! முதலமைச்சர் விஜய் பதவியேற்பு! இதுவரை இல்லாத புதுமை!
தவெக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 13 -வது முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கழகம் (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சி.ஜோசப் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
விழாவின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலும் தேசிய கீதமும் ஒலித்தன. அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. வழக்கமாக தமிழக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த விழாவில் வரிசை மாற்றம் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: விஜய் அமைச்சரவை பதவியேற்பில் வேற்றுமை! தவெக தலைவரை பின்பற்றாத ஆதவ் அர்ஜூனா!!
தேர்தலில் தவெக தனியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 ஆதரவு தேவைப்பட்டது. கூட்டணி ஆதரவுடன் 120 எம்எல்ஏக்களின் பலத்தை உறுதி செய்ததைத் தொடர்ந்து ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த விஜய், அரசியலில் நுழைந்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். புதிய அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று உற்சாகம் நிலவுகிறது.
இதையும் படிங்க: Breaking News! என் நெஞ்சில் குடியிருக்கும்!!! CM விஜய் உணர்ச்சிகர பேச்சு!! திமுகவினருக்கு கொடுத்த வார்னிங்!