×
 

விஜயின் திருச்சி கூட்டத்திற்கு NO சொன்ன போலீஸ்… அப்படி என்ன காரணம் தெரியுமா?

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாடு மற்றும் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகியவை கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த மாநாடுகளில், விஜய் சமூக நீதி, பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார்.

இது அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவிருக்கும் இந்த பிரச்சாரக் கூட்டம், விஜய்யின் மூன்று கட்டமாக திட்டமிடப்பட்ட 10 வார சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாகக் கருதப்படுகிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மரக்கடை அல்லது உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி? தலைமைக் கழகம் கொடுத்த விளக்கம்...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் உள்ள நான்கு இடங்களில் விஜய் உரைக்கு காவல் ஆணையர் அனுமதி மறுத்த நிலையில், போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வை திருச்சி உழவர் சந்தையில் நடத்த திட்டமிட்டுமாறும் போலீசார் அறிவுரை வழங்கினர். சாலை குறுகலான பகுதியாக இருக்கும் நிலையிலும், அதிக கூட்டம் கூடும் என்பதாலும் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி? சட்டென OPS கொடுத்த ரியாக்ஷன்! தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share