×
 

அச்சச்சோ...! ரஜினி ரூட்டை பாலோப் பண்ண பார்க்கும் விஜய்... எடப்பாடி, அமித் ஷா தலையில் இறங்கியது இடி...!

பொதுவெளியில இவ்வளவு சப்போர்ட் செஞ்சோம் எதுவும் பேசாத விஜய் ரஜினி வழியில் முடிவெடுத்துருவாரோனு பாஜகவும் அதிமுகமுகவும் யோசிக்க ஆரம்பிச்சிருக்காம். 

பொதுவெளியில இவ்வளவு சப்போர்ட் செஞ்சோம் எதுவும் பேசாத விஜய் ரஜினி வழியில் முடிவெடுத்துருவாரோனு பாஜகவும் அதிமுகமுகவும் யோசிக்க ஆரம்பிச்சிருக்காம். 

கரூர் சம்பவம் குறித்து ஊரே பேசிக்கிட்டு இருக்க தவெக தரப்பில் விஜய்யோ இல்ல அவரோட கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளோ அதை பத்தி வாயைத் திறக்கவே இல்லை. குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் தனிப்பட்ட முறையில் எந்த அனுதாபமும் தெரிவிக்கவில்லை, கரூருக்கு நேரில் சென்று அவர்களைச் சந்திக்க தைரியமில்லை என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அது பத்தி அடுத்த கட்டமா எந்த கருத்தும் சொல்லாதது அரசியல்ல பல கேள்விகளை எழுப்பி இருக்கு.

 தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவை கரூருக்கு அனுப்பி திமுகவை கடுமையா விமர்சிச்சு விஜய் பக்கம் பாஜக நின்றது. அதேபோல அதிமுக பொதுச் செயலாளரும் விஜயை விமர்சிக்காம தன்னோட பிரச்சார கூட்டத்தில் திமுக மீதும், அதிகாரிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை சொல்லி தான் ஆட்சிக்கு வந்தா யாரையும் சும்மா விடமாட்டேன்னு கொந்தளிச்சாரு. ஆனா விஜய் பக்கமிருந்து இந்த அரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாதது ஏன் என்ற கேள்வி பாஜக மற்றும் அதிமுக தரப்பில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: “ஆப்பு அண்ட் ஆதரவு” ஒரே இடத்தில் இருந்தா?... நொந்து போன விஜய்... சல்லி சல்லியாய் நொறுங்கும் இமேஜ்...!

நெருக்கடிகளை சமாளிக்க முடியாத ஒரு தலைவராக இருக்கிறோமோ என்ற சந்தேகம் விஜய்க்கு இருப்பதாகவும், இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது, யாரிடம் உதவி கோருவது என எதுவும் தெரியாமல் விழிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஜய் அடுத்து என்ன செய்யப்போறாருங்கிறது தெரியாத நிலையில் அதிமுக, பாஜக பெரும் குழப்பத்தில் இருக்காங்க.  

கரூருக்கு  அடுத்த சனிக்கிழமை வேலூர் ராணிப்பேட்டை பிரச்சாரத்துக்கு விஜய் கூட ஆதவ் அர்ஜுனா போறதா இருந்துச்சாம். கரூர் சம்பவத்துல எல்லாமே தலைக்கீழா மாறி போக ஆதவ் அர்ஜுனா அதே நாள்ல டேராடூன்ல அவர் பதவி வகிக்கிற பாஸ்கெட்பால் பெடரேஷன் நிகழ்ச்சிக்கு போயிட்டாரு. கிட்டத்தட்ட அரசியலுக்கு வர்துல தீவிரமா இருந்த ரஜினி ஒரே அறிக்கையில பின்வாங்கின மாதிரி விஜயும் அவர் ரூட்ல போயிடுவாரோன்னு பாஜக டெல்லி மேலிடத்துல ஒரே பேச்சா ஓடிக்கிட்டு இருக்காம். 
 

இதையும் படிங்க: நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க... இபிஎஸுக்கு டெல்லி கொடுத்த புது அசைன்மெண்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share