×
 

சிக்கலில் விஜய்! தவெகவின் ஆணிவேரை அசைக்க திமுக திட்டம்!! பக்கா ஸ்கெட்ச்!

'தங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டங்களை, தி.மு.க.,வினர் துாண்டி விடுகின்றனரோ' என, த.வெ.க., தலைமை சந்தேகிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் உள்கட்சி பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு எதிராக சொந்த கட்சியினரே பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருவதால், இதன் பின்னணியில் ஆளும் திமுகவினர் இருப்பதாக தவெக தலைமை சந்தேகித்து வருகிறது.

தவெகவுக்கு தமிழகம் முழுவதும் 120 மாவட்டச் செயலர்களை கட்சித் தலைவர் விஜய் நியமித்துள்ளார். இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியாக வசதி குறைந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது பல மாவட்டச் செயலர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களாக இருந்து, சொகுசு கார்களுக்கு மாறியுள்ளனர். சென்னை வரும்போது சொகுசு ஹோட்டல்களில் தங்கி ஆடம்பர வாழ்க்கை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சில மாவட்டச் செயலர்கள் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாகவும், அதன் மூலம் பண வசதி பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிலர் சொந்த கட்சியினரிடம் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும் புகார்கள் வரத்தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: திமுக இளைஞரணியில் புறக்கணிக்கப்படும் வட்ட செயலாளர்கள்!! தவெக பக்கம் திரும்பும் ரூட்! அப்செட்டில் உதயநிதி!

இதனால், பல மாவட்டங்களில் தவெக உட்கட்சி உறுப்பினர்கள் மாவட்டச் செயலர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தவெக வட்டாரங்கள் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெகவின் வேட்பாளர்களையும் நிர்வாகிகளையும் இழுக்க திமுக தலைமை திட்டம் தீட்டியுள்ளது. அதன் ஒரு கட்டமாக சில மாவட்டச் செயலர்களுடன் ஆளும் கட்சியினர் தொடர்பு கொண்டுள்ளனர். தற்போது மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டங்களை திமுகவினர் தூண்டிவிடுவதாக சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து ஏற்கனவே தகவல் அறிந்த விஜய், சந்தேகத்துக்குரிய மாவட்டச் செயலர்களை அண்மையில் தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் ‘வார் ரூம்’க்கு அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த கட்டமாக ஆளும் கட்சியுடன் தொடர்பில் உள்ளவர்களை பதவியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக கட்சி வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இத்தகைய உள்கட்சி பிரச்சினைகளும் சர்ச்சைகளும் கட்சிக்கு சவாலாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: தளபதி கச்சேரி... மலேசியாவுக்கு தனி விமான மூலம் புறப்பட்ட விஜய்...! ரசிகர்கள் செம குஷி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share