×
 

இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

நீலாங்கரை பகுதியில் வந்த போது முதல்வர் கான்வாய் செல்வதற்காக விஜயின் கார் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இன்று தனது 3-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. 2024 பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த கட்சி, இன்று பனையூர் உள்ள தலைமை அலுவலகத்தில் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவை நடத்தியது. விழாவில் விஜய் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றி வைத்தார். தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் நிலவியது.

காலையில் விஜய் நீலாங்கரை இல்லத்தில் இருந்து பனையூர் அலுவலகத்துக்கு புறப்பட்டார். அதே நேரத்தில் முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் மாமல்லபுரத்தில் உலகளாவிய சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைக்க சென்றார். சென்னை-மாமல்லபுரம் சாலையில் நீலாங்கரை பகுதியை அடைந்தபோது, முதல்வர் கான்வாய் வருவதால் விஜயின் கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. 

கான்வாய் சென்ற பிறகு விஜயின் கார் மீண்டும் பயணத்தை தொடர்ந்தது. இந்த சம்பவம் சாலை போக்குவரத்து விதிகளின்படி நடந்தாலும், இரு தலைவர்களின் பயணங்கள் ஒரே நேரத்தில் நடந்ததால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: த.வெ.க. புதுச்சேரியில் போட்டியிடுமா? விசில் சின்னம் கிடையாதா? விஜய் ப்ளானில் புது ட்விஸ்ட்!

விழாவை முன்னிட்டு விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியுள்ளது: “2026 சட்டசபை தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழலை சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.”

இந்த அறிக்கை தவெகவின் 2026 தேர்தல் உத்தியை தெளிவாக காட்டுகிறது. விஜய் தனது ரசிகர்களை தாண்டி பரந்த அரசியல் ஆதரவை பெற முயல்வதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தவெக தொண்டர்கள் இதை “புதிய அரசியல் அலை” என்று வர்ணிக்கின்றனர்.

இன்றைய நிகழ்வு தமிழக அரசியலில் புதிய போட்டியை உறுதிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் திமுக அரசு சுற்றுலா மாநாடு மூலம் வளர்ச்சியை காட்டினால், மறுபுறம் விஜய் தவெகவின் 3-ஆம் ஆண்டு விழா மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபித்தார். இரு தரப்பும் 2026 தேர்தலுக்கு தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது. விஜயின் அடுத்த கட்ட அறிவிப்புகள் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: திமுகவின் கோட்டையை தகர்க்கும் விஜயின் பிரமாஸ்திரம்! தலையெழுத்தே மாறப்போகுது! ஹைஸ்பீடில் தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share