×
 

#BREAKING: “மிஷன் ஆகமன்”..! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்- 1 ராக்கெட்..!

இங்கிருந்து தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் இருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த ராக்கெட், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. 'மிஷன் ஆகமன்' என்று பெயரிடப்பட்ட இந்த முதல் சோதனைப் பயணம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு ஏவப்பட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ராக்கெட் 12.05 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. 

விக்ரம்-1 ராக்கெட், இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட நான்கு நிலை ராக்கெட் ஆகும். முழுமையாக கார்பன் காம்போசிட் பொருட்களால் உருவாக்கப்பட்ட இதன் அமைப்பு இலேசான எடையையும் அதிக வலிமையையும் தருகிறது. முதல் மூன்று நிலைகள் திட எரிபொருள் உந்து அமைப்புகளாலும், நான்காவது நிலை திரவ எரிபொருள் அமைப்பாலும் இயக்கப்படுகின்றன.

ஸ்கைரூட் நிறுவனத்தின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3D பிரிண்டட் மற்றும் உயர் திறன் கொண்ட திட எரிபொருள் பூஸ்டர்கள் இதன் சிறப்பம்சங்கள். இந்த ராக்கெட், 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை தாழ்வான புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. முதல் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. 

இதையும் படிங்க: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

இந்த ராக்கெட் என்ற காலை 11:30 மணியளவில் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவுவதற்கு தயாராக இருந்தது. அதற்கான கவுண்டவுன் முடியும் தருவாயில் நிறுத்தப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்பக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ஆன விக்ரம் 1 இன்று ஏவப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் கண்டவுடன் தொடங்கியது. சற்று தாமதம் ஏற்பட்ட பிறகு, 20 நிமிடங்கள் கவுண்டவுன் தொடங்கிய நிலையில் 12.05 மணி அளவில் விக்ரம்- 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 

இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share