×
 

கையில் துப்பாக்கி, ரத்தக்கரை.. விஜய் கைகாட்டிப் பேசிய அதே ஸ்டைலில் அம்மன்..!! பரபரப்பு கட்டவுட்..!!

உச்சக்கட்டமாக நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனைத் தரிசித்து வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரி அருகே உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கழுநீரம்மன் கோவிலில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதலாம் ஆண்டு தேரோட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வில்லியனூருக்கு அடுத்த இந்த சிறிய கிராமத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் கோவில் உள்ளூர் மக்களிடையே பெரும் பக்தி மையமாகத் திகழ்கிறது.

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தினசரி சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் இரவு நேர வீதியுலாக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது. தெருக்கூத்து, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் ஊரை திருவிழாக்கோலத்தில் ஆழ்த்தின. உச்சக்கட்டமாக நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனைத் தரிசித்து வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தன்று அதிகாலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேர்த்திக்கடன்களாக செடல் அணிதல், அலகு குத்துதல் போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக ஒரு பக்தரை தரையில் படுக்கவைத்து அவரது வயிற்றின் மீது உரலை வைத்து உலக்கையால் இடிக்கும் அபூர்வ வழிபாடு பார்வையாளர்களை பயமும் வியப்பும் கலந்த நிலைக்குத் தள்ளியது. இதையடுத்து கலர் கலர் பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி, ‘அரோகரா’ கோஷங்களுடன் ஊர்வலம் சென்றார்.

இதையும் படிங்க: "காவி கொடி வேண்டாம், தேசியக் கொடி தாருங்கள்" -  பாஜக நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமித் ஷா!

இந்த விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட்டவுட் பேனர். ‘இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்’ என்ற வாசகத்துடன் அம்மன் காட்சியளித்தார். சமீபத்தில் சட்டப்பேரவையில் நடிகர் விஜய் கைகாட்டிப் பேசிய அதே சைகையில், கையில் துப்பாக்கியும் ரத்தக்கரை படிந்த கத்தியும் ஏந்திய வடிவில் அந்த கட்டவுட் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த இந்த தேரோட்டம் உள்ளூரில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களிலும் அந்த வினோதமான அம்மன் கட்டவுட் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. பாரம்பரிய பக்தி நிகழ்வுகளுடன் நவீன அரசியல் சைகைகளும் கலந்த இந்த சம்பவம், கோவில் திருவிழாக்களின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துவதாக பலரும் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு! நாடாளுமன்ற குழு தலைவர் முகுல் வாஸ்னிக் எம்பி நெகிழ்ச்சி கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share