வலுக்கும் கோரிக்கை.. செவி சாய்க்குமா மத்திய அரசு? எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தக்கூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன.
பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டன.
பகல்காம் தாக்குதல் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த கோரி தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மத்திய அரசு தரப்பில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே பி நட்டா உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். இந்த விவகாரத்தைப் போலவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசிக்க கூறும் முக்கியமான விஷயம் வாக்காளர் சிறப்பு திருத்தம் விவகாரம்.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி.. பிரியங்கா காந்தி கடும் குற்றச்சாட்டு..!
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியும் வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய உள்ளார்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு மறுப்பதாக கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் பின்னால ஒளிஞ்சிக்கவா உள்துறை அமைச்சர்? கௌரவ் கோகாய் சரமாரி கேள்வி..!