கொளத்தூர் MLA V.S. பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை..! சற்று ஆறுதல்..!!
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சுவாசக்கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.வி.எஸ்.பாபு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர். அண்மைய சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றார்.
75 வயதான அவர் ஏற்கனவே அரசியலில் அனுபவம் மிக்கவர். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பிறகு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சுவாசப் பிரச்சினைக்குத் தேவையான சிகிச்சையும், மருத்துவ ரீதியாக அவசியமான சுவாச ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட மருத்துவ அளவீடுகள் இயல்பான நிலையில் உள்ளன. அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருகிறார்.மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளில் அவரது உடல்நிலை சீராக இருப்பதும், முன்னேற்றம் காண்பதும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக அவரது உடல்நிலையைப் பற்றி நலம் விசாரித்தார். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: கொளத்தூர் MLA வி. எஸ். பாபு உடல் நிலை எப்படி இருக்கு..? மருத்துவமனை அறிக்கை..! சற்று நிம்மதி..!
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது வி.எஸ்.பாபு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலை முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது. விரைவில் முழுமையாக குணமடைந்து சட்டப்பேரவைப் பணிகளில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவரது நலன் குறித்து கட்சிப் பணியாளர்களும், தொகுதி மக்களும் ஆழ்ந்த அக்கறை காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!