×
 

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி! கண்ணீர் வடிக்கும் வைகோ! திமுக கூட்டணியில் சிரித்துக் கொண்டே அழும் மதிமுக!

தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது.

சென்னை: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டுப் பேச்சு தொடங்கியுள்ள நிலையில், ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட 4 தொகுதிகளுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் பெற்ற ம.தி.மு.க.வுக்கு இந்த முறை 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிலர் சிரிப்பார்கள், சிலர் அழுவார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் (கடந்த முறையை விட ஒன்று குறைவு), புதிதாக இணைந்த தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டில் ம.தி.மு.க.வுக்கு குறைவான தொகுதிகள் வழங்கப்பட்டது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

இதேபோல், கொங்கு மக்கள் தேசிய கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளுடனும் தி.மு.க. தரப்பில் தொகுதி பங்கீட்டுப் பேச்சு நடைபெற்று வருகிறது.

மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கு ஒரு தொகுதி உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. சங்ககிரி அல்லது பரமத்திவேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. 

ஆனால், நேற்று முன்தினம் அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்தபோது, “முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டதால் தனியரசு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து இன்று தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளார்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டுப் பேச்சு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்படுவதும், பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இத்தன சீட்டு தான்! இதுக்கு மேல கேட்காதீங்க! கறார் காட்டும் திமுக! கடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share