அடிச்சு நகர்த்தப் போகுது மழை... சென்னைக்கும் ரெட் அலர்ட்... உஷார் மக்களே...!
கனமழை தொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை அதிக கன மழை காண ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 29ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 29ஆம் தேதி அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு 29ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சென்யார் புயல் உருவானது... இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
மேலும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 29ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு வரும் 30ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களுக்கு ஒரு 30-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 30ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புயல் வருதாம்... டிசம்பரில் சென்னை எப்படி இருக்கும்..? தென் மண்டல வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!