கலவர பூமியான மேற்குவங்கம் - சந்து சந்தாக புகுந்து விரட்டி விரட்டி வெளுக்கும் துணை ராணுவம்...!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கி தற்போதுவரை இரண்டு மணி நேரத்தை கடந்திருக்கிறது. தற்போதுவரை பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் இன்றி வாக்கு பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்றைக்கு வாக்குப்பதிவு நடைபெறுகின்ற பெரும்பாலான தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் பதற்றமான தொகுதிகள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஆங்காங்கே பல இடங்களில் சில மோதல் சம்பவங்கள், கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாப்ரா, காந்திப்பூர், நிம்சலா பான் உள்ளிட்ட சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும், சிறிய அளவிலாக வன்முறை சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. நாடியா பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவர் பாஜகவினுடைய பூத் முகவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தவிர பாலி பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு அடைந்ததை தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து துணை ராணுவ படையினர் பெரிய அளவில் வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்தியும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் வன்முறையாளர்களை அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!
மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை அவர்கள் கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக பாவனிப்பூர் என்பது மிக முக்கியமான ஒரு தொகுதியாக இருக்கிறது. இது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி மற்றும் பாஜக சார்பில் எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் போட்டியிடக்கூடிய தொகுதியாக இருப்பதால் அங்கு ஏதேனும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்கிற ஒரு அச்சம் இருக்கிறது. எனவே அந்த பகுதியில் தொடர்ச்சியாக துணை ராணுவ படையினர் வாகனத்தில் பேரணியாக சென்றும், தொடர்ச்சியாக கொடி அணிவகிப்பை நடத்தியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு..!! ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!!