×
 

துபாயை உலுக்கிய தேஜஸ் விமான விபத்து: உயிரிழந்த விமானி நமன்ஷ் சியால் யார் தெரியுமா?

இந்திய போர் விமானமான தேஜஸ் விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விமானி உயிரிழந்தார். 

துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில், அந்த நிகழ்வின்போது, இந்திய போர் விமானமான தேஜஸ் விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விமானி உயிரிழந்தார்.   

துபாய்: து​பா​யில் நடை​பெற்ற விமானக் கண்​காட்​சி​யில் சாகசத்​தில் ஈடு​பட்ட இந்​திய விமானப்​படை​யின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்​டுப்​பாட்டை இழந்து தரை​யில் மோதி தீப்​பிடித்​தது. இந்த விபத்​தில் பைலட் உயி​ரிழந்​தார்.

துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகை​யில், துபா​யின் அல் மக்​தோம் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்​காட்சி தொடங்​கியது. இந்த கண்​காட்​சி​யில் உலகின் பல நாடு​களில் உள்ள 1,500-க்​கும் மேற்​பட்ட விமானங்கள் பங்கேற்றன. கண்காட்சியின் கடைசி நாளான நேற்று, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. 

இதையும் படிங்க: " விரைவில் அவர்கள் தலை துண்டிக்கப்படும்" - கடலம்மா மாநாட்டில் சீமான் ஆவேசம்...!

இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். விங் கமாண்டர் நமன்ஷ் சியால் உயிர் இழப்பிற்கு ஐஏஎஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் உறுதியாக நிற்போம். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்படும்" என்று ஐஏஎஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

 

யார் அந்த விமானி?

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியால் . இந்திய விமானப்படை அதிகாரியான அவரது மனைவி, ஆறு வயது மகள் மற்றும் அவரது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சுஜன்பூர் திராவில் உள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், டிசம்பர் 24, 2009 அன்று இந்திய விமானப்படையில் இணைந்தார். 

நமன்ஷ் தற்போது கோவைக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மனைவியும் இந்திய விமானப்படையில் பணியாற்றுகிறார், அவர் ஒரு பயிற்சிக்காத கொல்கத்தாவில் உள்ளார். அவரது தந்தை ஜெகநாத் சியால் இந்திய ராணுவத்தின் மருத்துவப் படையில் பணியாற்றினார், பின்னர் கல்வித் துறையில் பணியாற்றினார், பின்னர் கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றார்.

சோகத்தில் மூழ்கிய இமாச்சல்:

விங் கமாண்டர் சியால் இறந்த செய்தி அவரது சொந்த மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, விமானியின் படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “நாடு ஒரு துணிச்சலான, கடமையுணர்வு மிக்க மற்றும் துணிச்சலான விமானியை இழந்து விட்டது” என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இந்த சம்பவம் "மிகவும் மனவேதனை தருகிறது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share