அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
கல்வி அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் உயர் அரசு அதிகாரிகள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவது ஏன்?" என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் Cockroach Janta Party அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது தொடர்பாகக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கல்வித் துறையை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள அமைச்சர்களும், அத்துறையின் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்தும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலான அரசு ஊழியர்களும் தங்களது சொந்தப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கி, தனியார் பள்ளிகளுக்குப் படையெடுப்பது ஏன் என்று சாடியுள்ள அவர், தங்களது சொந்தத் துறையின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறனின் மீது அவர்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லையா என வினவியுள்ளார்.
இதையும் படிங்க: "E20 வேணாம், 100% பெட்ரோல் வேண்டும்!" நிதின் கட்கரிக்கு எதிராக உருவான 'E20 ஜனதா கட்சி'!
கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் நிலை உருவானால் மட்டுமே, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் விரைவாகவும் வியக்கத்தக்க வகையிலும் நவீனமடைந்து மேம்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரப்பான்பூச்சி கட்சியை குறிவைக்கும் கூட்டணி கணக்கு? ஆப்ஜித் தீப்கேவுக்கு மத்திய அமைச்சர் திடீர் அழைப்பு!