×
 

விவாகரத்து வழக்கு: மனைவி சொன்ன பரபரப்பு குற்றச்சாட்டு.. மும்பை ஐகோர்ட்டின் கருத்து என்ன..?

விவாகரத்து வழக்கில் கணவர் ஆண்மையில்லாதவர் என மனைவி கூறுவது அவதூறு ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்கில் மனைவி தனது கணவர் ஆண்மையில்லாதவர் எனக் கூறுவது அவதூறு குற்றமாகக் கருதப்படாது என தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, திருமண பிரச்சினைகளுடன் தொடர்புடைய வழக்குகளில் மனைவியின் குற்றச்சாட்டுகள் நியாயமானவை என்றும், அவை அவதூறு வழக்குக்கு உட்படுத்தப்பட முடியாது என்றும் தெளிவுபடுத்துகிறது. 

மராட்டிய மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவருக்கும், சத்தீஷ்கார் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. விவாகரத்து வழக்கின்போது பெண், கணவரை ஆண்மையில்லாதவர் என குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: பிகினி பொண்ணுங்ககிட்ட வம்பிழுத்தா அவ்வளவுதான்!! கோவாவில் புதிய மசோதா நிறைவேற்றம்..

இதனையடுத்து அந்த கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஆண்மையில்லாதவர் எனக் கூறி அவதூறு செய்ததாகக் கூறி மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். மோதக் அமர்வு முன் நடந்தது. நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து, திருமண வழக்குகளில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக உணர்ச்சிபூர்வமான மன உளைச்சலின் விளைவாக எழுவதாகவும், இவை அவதூறு குற்றமாகக் கருதப்பட முடியாது என்றும் கூறியது. 

நீதிபதிகள், திருமண உறவில் ஏற்படும் முரண்பாடுகளின் போது இத்தகைய குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக நியாயமானவை என்று வலியுறுத்தினர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு தொடரப்படுவதற்கு, குற்றச்சாட்டு தவறான நோக்கத்துடன், பொதுவெளியில் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 

மேலும் இதுதொடர்பாக நீதிபதி, "திருமணத்தில் ஒரு பெண் எப்படி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். விவாகரத்து தொடர்பான வழக்கில் ஆண்மை தொடர்பாக கூறுவது அவசியமானது. தம்பதிக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே மனைவி அவரது நலன்கருதி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமானது தான். அதை அவதூறு என கூறமுடியாது" என்றார்.  

இந்தத் தீர்ப்பு, திருமண விவகாரங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பதற்கும் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமைகிறது. இது, திருமண உறவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதற்கு உதவும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.,: தனியார் கல்லூரிகளில் ஆக.18 முதல் வகுப்புகள் தொடக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share