இன்னொரு பிரியாணி அபிராமியா? - குழந்தை கதற, கதற பஸ் ஸ்டாண்டில் தாய் செய்த காரியம்... கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வீடியோ...!
சிறிது நேரத்தில் குழந்தையை பயணிகள் இருக்கையில் அமரவைத்து கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்துவிட்டு சென்ற தாய் நீண்ட நேரமாக திரும்பவில்லை.
பேருந்து நிலையத்திற்கு தாயுடன் வந்த 15 மாத சிறுவன் தாயை காணவில்லை என தேடும் காட்சிதான் இது. தாயை தேடி சிறுவன் கதறி அழுது கொண்டிருந்த நேரம் தாய் இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் ஏறி தப்பிவிட்டார். ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நவீனா. நவீனாவிற்கு திருமணமாகி 15 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 15 மாத மகனுடன் நல்கொண்டா ஆர்டிசி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையை பயணிகள் இருக்கையில் அமரவைத்து கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்துவிட்டு சென்ற தாய் நீண்ட நேரமாக திரும்பவில்லை.
தாய் வருவார் என காத்திருந்த 15 மாத சிறுவன் தாய் வராததால் அங்கும் இங்கும் ஓடி தாயை தேடி உள்ளான். இங்கும் தாய் இல்லாததால் சிறுவன் கதறி அழுதுள்ளான். இதனை பார்த்து பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி தாய் வந்துவிடுவார் என கூறியுள்ளனர். ஆனால் கடைசி வரை தாய் வராததால் பேருந்து நிலைய கண்காணிப்பு அறையில் அமர வைத்தனர். பின்னர் பேருந்து நிலைய ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அப்போது நவீனா மகனை பயணிகள் இருக்கையில் அமர வைத்துவிட்டு ஒருவருடன் பைக்கில் செல்வது பதிவாகி இருந்தது.
தாய் திட்டமிட்டே சிறுவனை பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதை எடுத்து பைக் எண்ணை வைத்து தேடி நவீனாவையும் அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்தனர். இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. தெலுங்கானா மாநிலம் நல்குண்டாவை சேர்ந்தவர் நரேஷ் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்துள்ளார். அப்போது இன்ஸ்டா மூலம் நவீனாவின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் இன்ஸ்டாவில் நீண்ட நேரம் சாட் செய்து கொண்டே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் போன் எண்களை பரிமாறி கொண்டவர்கள் நேரிலும் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாகி உள்ளனர்.
இதையும் படிங்க: பத்த வச்சிட்டியே டிரம்ப்பு!!! இந்தியா - பாக்., சண்டையை நிறுத்துனது நான்தான்!! மீண்டும் மீண்டும் கிளப்பும் சர்ச்சை..!
நாளடைவில் நட்பு காதலாகி ரகசிய உறவாக மாறியுள்ளது. கணவரை விட்டு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வதாக காதலன் நரேஷ் கூறியுள்ளார். இதனால் காதலனுடன் செல்ல நவீனா திட்டமிட்டுள்ளார். அங்கு காதலன் பைக்கில் காத்திருந்துள்ளார். அவருடன் செல்ல முயன்றபோது குழந்தையையும் விட்டு வந்தால் தான் அழைத்துச் செல்வேன் எனக்கூறியதாக தெரிகிறது. சற்றும் தயங்காத நவீனா குழந்தையை பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்க கூறி, கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்துவிட்டு நவீனா அங்கிருந்து நைசாக நகர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதை எடுத்து நவீனாவின் கணவருக்கு போலீசார் தகவல் சொல்லி வரவழைத்தனர். அவர் வந்ததும் குழந்தையை ஒப்படைத்த போலீசார் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு நவீனாவிற்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
#Telangana மாநிலம் #Nalgondaவில் 15 மாதக் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு, #Instagram மூலம் பழகிய காதலருடன் பைக்கில் ஏறிச் சென்ற பெண்
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) July 28, 2025
அழுதுகொண்டிருந்த குழந்தையை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி தந்தையிடம் ஒப்படைத்தனர். #CCTV மூலம் தாயையும் பிடித்துள்ளனர் pic.twitter.com/jyPrtLLFvv
இதையும் படிங்க: நாளை விண்ணில் பாய்கிறது நிசார்!! பூமியை இன்ச் பை இன்ச் படம் பிடிக்கும் சேட்டிலைட்!!