“அமெரிக்கா வேண்டாம்... இந்தியாவுலையே இருன்னு சொன்னனே” - விசா மறுக்கப்பட்டதால் இறந்த பெண் மருத்துவரின் தாய் கதறல்...!
அமெரிக்க விசா வழங்குவதில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டதால் ரோஹிணி எச்1பி விசாவை ஜெ1 விசாவாக மேம்படுத்த விண்ணப்பித்தபோது அமெரிக்க அரசாங்கம் அவரை நிராகரித்தது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரோஹிணி (38) கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்தார். பின்னர், அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் படிப்பிற்காக எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றார். படிப்பை முடித்த பிறகு, அவர் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் வேலையில் சேர முயற்சித்து பணி நியமனமும் பெற்றார். முன்னதாக அவர் தனது குடும்பத்தினரை பார்க்க கடந்த மே மாதம் இந்தியா வந்தார். இதற்கிடையில், அமெரிக்க விசா வழங்குவதில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டதால் ரோஹிணி எச்1பி விசாவை ஜெ1 விசாவாக மேம்படுத்த விண்ணப்பித்தபோது அமெரிக்க அரசாங்கம் அவரை நிராகரித்தது.
இதனால், அவர் மிகவும் வருத்தமடைந்து, ஐதராபாத்தின் பத்மாராவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். விசா ரத்து செய்யப்பட்டதால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்த சூழலில் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஒரு ஊசி செலுத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தின் மற்றொரு பகுதியில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பல முறை போன் செய்து அவரது போன் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால், அவர்கள் உடனடியாக குடியிருப்பிற்கு வந்து பார்த்தபோது ரோஹிணி உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பரிசோதித்து, அவர் தற்கொலை செய்து கொண்டதை தீர்மானித்தனர்.
இதற்கான தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், விசா கிடைக்காததால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக ஆரம்பத்தில் கூறி தற்கொலை செய்து கொள்வதாக எழுதி உள்ளார். இதனையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறி பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: புயல் வருதாம்... டிசம்பரில் சென்னை எப்படி இருக்கும்..? தென் மண்டல வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!
ரோகிணியின் தாய் லட்சுமி கூறுகையில், தனது மகள் வேலைக்காக அமெரிக்கா செல்ல விரும்பினாள். ஆனால் விசா நிராகரிக்கப்பட்டதால் கடும் மன வருத்தமடைந்ததாக புத்தகம் படிக்க நூலகங்கள் அருகில் இருப்பதாக கூறி பத்மாராவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவர் ஒரு சிறந்த மருத்துவ மாணவியாக 2005 முதல் 2010 ஆண்டு வரை கிர்கிஸ்தானில் இருந்தார். நல்ல கல்வி அனுபவம் இருந்தது. இந்தியாவில் தங்கச் சொன்னால் தனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் அமெரிக்கா செல்வதாக கூறி வந்தார். தனது மகளுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை வீட்டில் தனியாக இருந்ததால் இவ்வாறு விசா கிடைக்காததை நினைத்து மன உளைச்சலில் இவ்வாறு செய்து கொண்டதாக கூறினார். இதுகுறித்து சிலக்கல்குடா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாட்டா பாடுறாங்க!! வன்முறையை தூண்டுறாங்க! சட்ட நடவடிக்கை பாயும்!! டிஜிபி வார்னிங்!