பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!
திருமணத்திற்கு புறம்பான உறவு கொண்டிருந்த பெண்னின் மகளுக்கு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் தாக்கிய பெண்
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ரச்சனபள்ளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுரேஷ் ஆட்டோ ஓட்டி கொண்டு அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வந்துள்ளார். சமீபத்தில், அவர் அப்பெண்ணின் மகள் மீதும் விரும்ப தொடங்கி உள்ளார்.
இதுபற்றி அப்பெண் பலமுறை தன் தாயிடம் கூறியுள்ளார். இதனால் தன் மகளின் அருகில் செல்ல வேண்டாம் என்று அவர் தன் காதலனை எச்சரித்தார். இருப்பினும் சுரேஷ் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்தநிலையில் சனிக்கிழமை அன்று, சுரேஷ் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். நள்ளிரவுக்குப் பிறகு, அப்பெண் கழிவறைக்கு சென்றபோது அவரது மகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார்.
பாதிக்கப்பட்ட பெண் அலறியதால் அவளது தாய் ஓடிவந்து அவரைத் தடுக்க முயன்றார். இருப்பினும் சுரேஷ் நிற்காததால் அவர் கத்தியால் சுரேஷ் அந்தரங்க உறுப்பில் தாக்கினார். இதில் கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சுரேஷ் மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...!
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விசாரணைக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என்று அனந்தபுரம் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடச்சீ... தாயா? இல்ல பேயா?... துடிக்க துடிக்க பெற்ற மகளுக்கு அம்மாவே செய்த கொடூரம்...!