×
 

பெண் என்பதாலேயே ஜீவானாம்சம் கோர முடியாது! கர்நாடக ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

'மனைவி பொருளாதார ரீதியாக பலமாக இருக்கும்போது, பெண் என்ற காரணத்தால் ஜீவனாம்சம் கோர முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: மனைவி பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இருக்கும்போது, பெண் என்ற காரணத்தால் மட்டும் ஜீவனாம்சம் கோர முடியாது என கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த ஜீவன் மற்றும் சஹானா தேவி இடையே 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சஹானா தேவி விவாகரத்து மனு தாக்கல் செய்தார். மைசூர் முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சஹானா தேவிக்கு மாதம் 20,000 ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்குமாறு ஜீவனுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சில்லாகூர் சுமலதா, “மனைவி சஹானா தேவி மாதம் ஒரு லட்சம் ரூபாயும், கணவர் ஜீவன் மாதம் 60,646 ரூபாயும் சம்பாதிக்கின்றனர். மனைவியின் வருமானம் கணவரை விட அதிகம். குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பும் அவருக்கு இல்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2 வருஷம் ஜாலியா உல்லாசம்.. பிரேக்அப் செய்த காதலன்!! கோர்ட் படியேறிய இளம்பெண்ணுக்கு ஷாக்..!!

மேலும், “பெண்கள் என்ற காரணத்தால் மட்டும் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது. தன்னைத் தானே பராமரிக்க நிதி இல்லை என்பதை மனைவி நிரூபித்தால் மட்டுமே ஜீவனாம்சம் வழங்க வேண்டும்” எனத் தெளிவுபடுத்தினார்.

சஹானா தேவி திருமணத்துக்காக வாங்கிய கடன் மற்றும் வட்டி விவரங்களையும் சரியாக தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். இருப்பினும் இந்த உத்தரவு இடைக்கால ஜீவனாம்சத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு, திருமண விவாகரத்து வழக்குகளில் பொருளாதார சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆண்களுக்கு எதிராக தவறான வழக்குகள் தொடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 2 வருஷம் ஜாலியா உல்லாசம்.. பிரேக்அப் செய்த காதலன்!! கோர்ட் படியேறிய இளம்பெண்ணுக்கு ஷாக்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share