ஐஎம்எப்-ன் நியமன இயக்குநர்.. இந்தியா சார்பில் பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை?
சர்வதேச பணநிதியத்துக்கு இந்தியா சார்பில் தற்காலிக நியமன உறுப்பினராக உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பணநிதியத்துக்கு இந்தியா சார்பில் தற்காலிக நியமன உறுப்பினராக உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 9ம் தேதி ஐஎம்எப் சார்பில் முக்கியமான கூட்டம் நடக்க இருப்பதால் அதில் இந்தியா சார்பில் பிரதிநிதி பங்கேற்க வேண்டும் என்பதால், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பண நிதியத்தில் நிர்வாக இயக்குநராக இருந்த இந்தியாவின் கே.வி. சுப்பிரமணியத்தின் பதவிக்காலம் முடிய 6 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு அவரை திரும்ப அழைத்துள்ளது. இந்தியாவுக்கு காலநிலை மாற்றம் தொடர்பான கடன் திட்டத்துக்காக 130 கோடி டாலர் கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் 9ம் தேதி ஐஎம்எப் சார்பில் நடக்கிறது. இதில் இந்தியாவுக்கு வழங்கப்படும் கடன் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் நிலையில் அப்போது இந்தியா சார்பில் பிரதிநிதி இருப்பது அவசியம்.
இதையும் படிங்க: இன்னும் பதவிக்காலமே முடியல... ஐஎம்எப் இயக்குனரை திரும்ப அழைத்த மத்திய அரசு..!
ஆனால், ஐஎம்எப்பில் இந்தியாவின் பிரதிநிதி சுப்ரமணியத்தை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, பரமேஸ்வரன் ஐயர் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு திவால்கடன் 700 கோடி டாலர் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ராஜங்க ரீதியாக பாகிஸ்தானுக்கு பலவிதத்திலும் நெருக்கடியை இந்தியா அளித்துள்ளது. உலக நாடுகளின் ஆதரவையும் இந்தியா பெற்று வருகிறது, இந்த நிதியையும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவிடாமல் இந்தியா சார்பில் ஐஎம்எப் அமைப்புக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஐஎம்எப் இயக்குநராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட கே.வி.சுப்பிரமணியன் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிகிறது. ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு அவரை திரும்ப அழைத்து ஏப்ரல் 30ம் தேதி மத்திய அமைச்சரவை நியமனக் குழு பிறப்பித்த உத்தரவிட்டுள்ளது.
சுப்பிரமணியத்தை திரும்ப அழைத்தது குறித்து இதுவரை மத்திய அரசு தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. ஆனால், சுப்பிரமணியம் , “ ஐஎம்எப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்து சமீபத்தில் கேள்விகளை எழுப்பியதாகவும், இந்தியாவுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து எழுப்பிய கேள்விகள், பேச்சுகளும் மத்திய அரசுக்கு அதிருப்தியை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சுப்பிரமணியம் பதவிக்காலம் முடியும் முன்பே திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு 17-வது பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பமிரமணியன் அங்கிருந்து ஐஎம்எப்-க்கு அனுப்பப்பட்டார். ஐஐடி காரக்பூரில் படித்த சுப்பிரமணியன், ஐஐஎம் கொல்கத்தாவில் எம்பிஏ முதுநிலை பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் சுப்பிரமமணியந் பெற்றவர். பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றில் பல உயரிய பொறுப்புகளில் சுப்பிரமணியன் இருந்தார்.
இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!