8 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..! மோடி அரசின் அதிரடி உத்தரவுக்குப் பணிந்த எக்ஸ் தளம்..!
மத்திய அரசிடம் இருந்து நிர்வாகரீதியான உத்தரவுகள் வந்ததையடுத்து, 8 ஆயிரம் கணக்குகளை முடிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக எக்ஸ் தளம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து நிர்வாகரீதியான உத்தரவுகள் வந்ததையடுத்து, 8 ஆயிரம் கணக்குகளை முடிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக எக்ஸ் தளம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் உலகளாவிய அரசு விவாரங்கள் துறை பதிவிட்ட செய்தியில் “இந்திய அரசிடம் இருந்து நிர்வாக ரீதியான உத்தரவுகள் 8ஆயிரம் கணக்குகளை முடக்ககோரி வந்தன. இந்த கணக்குகளை முடக்காவிட்டால் அபராதம், சிறை தண்டனை ஆகியவற்றை ஊழியர்கள் சந்திப்பார்கள் என்பதால் முடக்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனங்கள், புகழ்பெற்ற எக்ஸ் தளம் பயனாளிகள் உள்ளிட்டோரின் எக்ஸ் தள கணக்குகளை முடக்ககோரி இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. எந்த குறிப்பிட்ட பதிவையும் நீக்கக் கோரியும், அது இந்திய சட்டங்களை மீறியதாகவும் தெரிவிக்கவில்லை. கணக்குகளை முடக்கக் கோரி மட்டும்தான் உத்தரவுகள் வந்தன, அதற்கான ஆதாரங்கள், காரணங்களை தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாக்.-ன் ‘பொய்யான பரப்புரை’க்கு பலியாகாதீர்கள்.. நெட்டிசன்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!
இந்த உத்தரவுக்கு நாங்கள் பணிந்து நடக்க வேண்டும் என்பதால் நாங்கள் இந்தியாவில் மட்டும் அந்த கணக்குகளை முடக்குகிறோம். இதற்கான பணியைத் தொடங்கிவிட்டோம். ஒட்டுமொத்த கணக்கையும் முடக்கும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை, அது தேவையற்றது. ஏற்கெனவே தணக்கை முறை இருப்பதால் தேவையில்லை, இது எளிதான முடிவும் அல்ல, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் இந்தியாவுக்கென பதிவுகளை இட முடியாது.
இந்த நிர்வாக உத்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பது வெளிப்படைத்தன்மைக்கு அவசியம் என நாங்கள் நம்புகிறோம். இதை தெரிவிக்காவிட்டால், எங்கள் பொறுப்புணர்வை பலவீனப்படுத்தி, தன்னிச்சையான முடிவெடுக்க வைக்கும். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, மத்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியாது.
இந்தியாவில் உள்ள பயனர்களைப் போல் அல்லாமல், இந்த நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக சட்ட சவால்களைக் கொண்டுவரவும் எக்ஸ் தளத்துக்கு கட்டுப்பாடு இருக்கிறது. இருப்பினும், இந்த தடை உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பயனர்களும் நீதிமன்றங்களிலிருந்து தகுந்த நிவாரணம் பெற நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இவ்வாறு எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வடமாநிலங்களில் 21 விமான நிலையங்கள் 10ம் தேதி வரை மூடல்.. என்ன காரணம்?